ஆஹா! ரூ.16,000க்கு லாவா அக்னி 2 5ஜி? அமேசானில் வந்த அசத்தல் ஆஃபர்!

lava agni 2 5g

பிரபல மொபல் நிறுவனமான லாவா சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை அறிமுகம் செய்தது. இந்த போன் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் பலருக்கும் இந்த போன் பிடித்துப்போக உடனடியாக பலரும் வாங்கினார்கள். இந்த போனின் அடிப்படை விலை 20,000. இந்த விலையில் தான் இந்த போன் அறிமுகமும் ஆனது.

இதனை எடுத்து 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்த ‘லாவா அக்னி 2 5ஜி’  போனை ரூ.16,000-க்கு வாங்கும் சலுகையை லவா அமேசாங்லி கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் மூலம் இந்த போனை ரூ.16,000 விலையில் வாங்கலாம். அதற்கான 20 ஆப்பர்ஸ் கொண்ட விவரங்களும் அமேசானில் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வங்கியில் சரியாக பணம் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருபவர்கள் இந்த போனை வாங்க விரும்பினால் தள்ளுபடி மூலம் 4ஆயிரத்தில் இருந்து 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெற்று இந்த போனை வாங்கி கொள்ளலாம். அதைப்போலவே பழைய போனை கொடுத்துவிட்டு இந்த போனை வாங்கும் வசதி முன்னதாக இல்லாமல் இருந்தது.

ரூ.7,000 க்கு அட்டகாசமாக அறிமுகம் ஆகும் டெக்னோ பாப் 8! எப்போது தெரியுமா?

தற்போது அந்த வசதியும் இந்த ‘லாவா அக்னி 2 5ஜி” வாங்குவதில் கொண்டு வரப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் மூலம் 3,500 வரை விலை குறைத்து இந்த போனை வாங்கிகொள்ளலாம். அதைப்போல, கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனை மூலம் வாங்குபவர்கள் ரூ.1,200 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகைகள் வரும் ஜனவரி 10-ஆம் தேதி

16,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த போனை வாங்கி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், அந்த அளவிற்கு நல்ல அம்சங்களை இந்த போன் கொண்டு வந்துள்ளது.

லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள் 

  • இந்த லாவா அக்னி 2 5ஜி போன் ஆனது 78-இன்ச் FHD+ 120Hz 3D வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.  மேலும், இந்த போன் 66W சார்ஜிங் வசதியுடன்  4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  • கேமராவை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் 50MP முன் கேமராவையாவும், 8MP அல்ட்ராவைட், 2MP மேக்ரோ மற்றும் 16MP செல்ஃபி (முன்கேமராவையும்) கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi