அறிமுகமானது ‘Xiaomi Pad 6’..! எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா..? முழு விவரம் இதோ…

XiaomiPad6

சியோமி (Xiaomi), தனது இரண்டாவது சியோமி பேட் (Xiaomi Pad) டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிலும் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தரக்கூடிய நிறுவனங்களில் முதன்மையாக இருக்கக்கூடிய சியோமி (Xiaomi)  தனது பயனர்களுக்காக சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) டேப்லெட் மற்றும் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் (Redmi Buds 4 Active) ஆகியவற்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

XiaomiPad6
XiaomiPad6 [Image source : Twitter/@gizmochina]

இந்த இரண்டு தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்வு எக்ஸ்யூமின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. முன்னதாக, சியோமி கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் உடன் கூடிய சியோமி பேட் 5 டேப்லெட்டை அறிமுகப்படுத்தியிருந்தது. இது பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தற்பொழுது அறிமுகமாகியுள்ள பேட் 6 பயனர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சியோமி பேட் 6 டேப்லெட்டின் சிறப்பம்சங்களை இப்பொழுது காணலாம்.

சியோமி பேட் 6 டிஸ்பிளே: 

இந்த சியோமி பேட் 6 டேப்லெட் ஆனது  2880 x 1800 பிக்சல்கள் கொண்ட 11 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த டேப்லெட் 144Hz ரெபிரெஷிங் ரேட்,  550 nits உச்சகட்ட பிரகாசம் (Brightness), 240Hz தொடு மாதிரி வீதம் (Touch Sampling) கொண்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது.

XiaomiPad6
XiaomiPad6 [Image source : Twitter/@Xiaomi India]

சியோமி பேட் 6 பிராசஸர்:

இந்த டேப்லெட் குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 870 Soc (Qualcomm Snapdragon 870 SoC) உடன் Adreno 650 GPU மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 மென்பொருள் அமைப்பைக் கொண்டுள்ளது.

XiaomiPad6
XiaomiPad6 [Image source : Twitter/@firstvikesh]

சியோமி பேட் 6 கேமரா:

இது 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்.பி கேமரா கொண்ட பின்புற அமைப்பைக்  கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோஃபோன்கள் போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

XiaomiPad6
XiaomiPad6 [Image source : Twitter/@Xiaomi India]

சியோமி பேட் 6 பேட்டரி:

சியோமி பேட் 6 டேப்லெட் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,840mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனால் சில நிமிடங்களிலேயே பேட்டரி சார்ஜ் முழுமையடைந்து விடுவதோடு அதிக நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேப்லெட் ஜூன் 21ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

XiaomiPad6
XiaomiPad6 [Image source : Twitter/@pennedbyhim]

சியோமி பேட் 6 நினைவகம் மற்றும் விலை:

இந்த டேப்லெட் 6ஜிபி ரேம்+ 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜூடன் கிராஃபைட் கிரே, மிஸ்ட் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களுடன் வருகிறது. 6ஜிபி ரேம்+ 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டேப்லெட் ரூ.23,999க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டேப்லெட் ரூ.25,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

XiaomiPad6
XiaomiPad6 [Image source : Twitter/@Xiaomi India]

இணை சாதனங்கள்:

இந்த டேப்லெட்டுடன் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ், 30 மணிநேரம் வரை பேட்டரி செயலில்  கூடிய பேட்டரியுடன் வருகிறது. இதன் விலை ரூ.1,199 ஆக உள்ளது. 12மிமீ பாஸ் ப்ரோ டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கீபோர்ட் ரூ.5,000 ஆகவும், ஸ்மார்ட் பென் ரூ.6,000 ஆகவும் உள்ளது. இந்த சாதனங்களை எம்ஐ ஸ்டோரில் வாங்கிக் கொள்ளலாம்.

RedmiBuds4Active
RedmiBuds4Active [Image source : Twitter/@Xiaomi India]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest