Realme 5G[file image]
Realme P1 : இந்திய மார்க்கெட்டில் இன்றைய நாளில் அறிமுகமாகி உள்ளது ரியல்மி சீரியசின் புதிய 5G போன். அந்த போனின் அமைப்பு, சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்க்கலாம்.
ரியல்மி P1 சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் மொபைல் பிராண்டின் புதிய வரிசையாகும். இது இந்திய மக்குளுக்கெனவே உருவாக்க பட்ட மொபைல் போன் ஆகும். மேலும் இந்த சீரிஸில் ரியல்மி P1 மற்றும் ரியல்மி P1 Pro ஆகிய இரண்டு வித மொபைல்கள் அறிமுகமாகியுள்ளது. ரியல்மி நிறுவனம் ஏற்கனவே இந்த மொபைலின் அம்சங்கள், விலை விவரங்கள் என்று சில முக்கிய விவரக்குறிப்புகளை முன்னரே வெளியிட்டது. அதே போல தற்போது வெளியாகி உள்ள இந்த ரியல்மி சீரிஸ் அதே அம்சங்களுடன் வெளியாகி உள்ளது.
ரியல்மி P1 போன் பீகாக் க்க்ரீன் (Pecock Green) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoneix Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ரியல்மி P1 ப்ரோ 5G போன் ஆனது பேரட் ப்ளு (Parrot Blue) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoenix Red) ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.
இந்த ரியல்மி P1 போன் மிகவும் பழக்கமான வடிவமைப்புடனே உருவாக்கி இருக்கின்றனர். போனின் இந்த வடிவமைப்பு புதிதாக இல்லை என்றாலும் பார்ப்பதற்க்கு ஒரு ஈர்க்க கூடிய உணர்வையே கொடுக்கிறது. இந்த ரியல்மி P1 வலது புறத்தில் வால்யூம் பட்டனும், பவர் பட்டன் உள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு முன் ஸ்க்ரீனில் மேல் புறத்தில் சென்டரில் பஞ்ச்-ஹோல் உள்ளது. அதே போல பின் புறத்தில், டிரிபிள் கேமராக்கள் மற்றும் எல்இடி (LED) ஃபிளாஷ் லைட்டுடன் அமைந்துள்ளது.
அதே போல மறுபுறம், ரியல்மி P1 ப்ரோ ஆனது டிசைனில் முன்னிலும், பின்னிலும் வளைந்த விளிம்புகளுடன் அதிக பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. மேலும் இதிழும் முன் புறத்தில் செல்ஃபி எடுப்பதற்கு முன் ஸ்க்ரீனில் மேல் சென்டரில் பஞ்ச்-ஹோல் உள்ளது. அதே போலபின் புறத்தில் டூயல் கேமராக்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் அமைந்துள்ளது.
குறிப்பு : இந்த ரியல்மி P1 சீரிஸ் இன்று மாலை 6 மணி முதல் 8மணி வரை realme.com மற்றும் பிலிப்கார்ட்டிலும் (Flipkart) விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ரியல்மி P1 ப்ரோ ஏப்ரல்-22ம் தேதி அன்று மலை 6 மணி முதல் 8 மணி வரை realme.com மற்றும் பிலிப்கார்ட்டிலும் (Flipkart) விற்பனைக்கு வந்துவிடும் என்று அதிகாரப்பூர்வமாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ரியல்மி P1 சீரிஸ் உடன் இரண்டு அம்சமான கேட்ஜெட்டுகளையும் வெளியிட்டு உள்ளது ரியல்மி நிறுவனம். அது என்னவென்றால் ரியல்மி பட்ஸ் T110 (Realme Buds T110), மற்றும் ரியல்மி பேட் 2 (Realme Pad 2) ஆகும். தற்போது அவற்றை பற்றிய சிறிய குறிப்பை பார்ப்போம்.
இயர்பட்கள் 10 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. இரைச்சலை ரத்து செய்து தெளிவான பாடல்கள் கேட்பதற்கு உதவுகிறது. மேலும், போன் கால் பேசும்பொழுது இரைச்சலை ரத்துசெய்ய AI ENC தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக, வேகமாக சார்ஜ் செய்து கொள்ளும்படி பேட்டரி.
அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால், 38 மணிநேரம் வரை பாடல் கேட்கும்படி, பேட்டரி வசதியை கொண்டுள்ளது. இதன் விலை 1,499 ரூபாய் என்றும், ஆனால் 200 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு 1,299 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும் ஏப்ரல் 19ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது, அதாவது (Country Green) கண்ட்ரி க்ரீன், (Jazz Blue) ஐஸ் ப்ளூ மற்றும் (Punk Black) பங்க் பிளாக் ஆகியவை அடங்கும்.
ரியல்மி பேட் 2 ஆனது 11.5-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருவதால் இந்த திரையில் பார்க்கப்படும் வீடியோக்களை பொறுத்து 40 ஹெர்ட்ஸ், 60 ஹெர்ட்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் என்று மாற்றியமைக்கக்கூடிய அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே ஆதரிக்கும் திறன் உடன் உருவாக்கி உள்ளனர்.
33W SUPERVOOC சார்ஜிங்குடன் 8,360mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது இன்ஸ்பிரேஷன் கிரீன் (Inspiration Green) மற்றும் இமேஜினேஷன் கிரே (Imagination Grey) என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. 16 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் 8MP பின்புற மற்றும் 5MP கேமராக்களை கொண்டுள்ளது. இதனை realme.com மற்றும் Flipkart இல் ரூ.17,999க்கு கிடைக்கிறது. இதனை ரூ.2,000 அறிமுக சலுகையாக பெற்று கொள்ளலாம்.
இந்த 2 பொருள்களும் வருகிற ஏப்ரல்-19 ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துவிடும் என்பதை தெரிவித்து ரியல்மி நிறுவனம்.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…