இந்த நிலையில், கேடிஎம் ட்யூக் 200 பைக்கை குறைவான தொகையில் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான விசேஷ ஆக்சஸெரீகளை புனேயை சேர்ந்த ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதற்கு விசேஷ பாடி பேனல்கள் மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகள் மூலமாக இது உதவும்.
இந்த விசேஷ ஆக்சஸெரீகள் கொண்ட கஸ்டமைஸ் கிட்டிற்கு ஸ்ட்ரீட் எக்ஸ்2 என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறது ஆட்டோலாக் டிசைன் நிறுவனம். இந்த விசேஷ ஆக்சஸெரீகளை சுயமாகவே பைக் உரிமையாளர் பொருத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
வெறும் 20 நிமிடங்களில் இந்த ஆக்சஸெரீகளை பொருத்தி உங்களது கேடிஎம் ட்யூக் 200 பைக்கை தனித்துவமாக மாற்ற முடியும் என்கிறது ஆட்டோலாக் டிசைன் நிறுவனம். கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இணையான தோற்றத்தை பெறும் வகையில் இந்த விசேஷ பாடி பேனல்கள் மற்றும் ஆக்சஸெரீகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
பெட்ரோல் டேங்குடன் இணைத்துக் கொள்ளகூடிய புதிய பாடி பேனல்கள், எஞ்சினை மூடுவதற்கான பெல்லி பேன், ரேடியேட்டர் கவர் என இந்த கஸ்டமைஸ் கிட்டில் பல தனித்துவமான ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சீட் கவுல், டயர் ஹக்கர் உள்ளிட்ட ஆக்சஸெரீகளும் இந்த பேக்கேஜில் இடம்பெற்று இருக்கிறது.
பைக்கின் வண்ணத்திற்கு தக்கவாறு இந்த பாடி பேனல்கள் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கின்றன. தேவைப்படும்போது எளிதாக கழற்றி வைக்க முடியும் என்பதால், வாரண்டி பிரச்னை இருக்காது என்று ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவிக்கிறது
கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கான விசேஷ கஸ்டமைஸ் பேக் தவிர்த்து, கேடிஎம் ட்யூக் 250 பைக்கிற்கு கேடிஎம் ட்யூக் 390 பைக் போன்ற வடிவத்திலான ஹெட்லைட் ஹவுசிங்கையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், எல்இடி விளக்குகள் இருக்காது.
இந்த கஸ்டமைஸ் கிட்டை பெற விரும்பும் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரிக்கே இந்த கஸ்டமைஸ் கிட்டை அனுப்புவதாகவும் ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கஸ்டமைஸ் கிட்டிற்கு ரூ.12,946 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…