இந்தியாவில் தாம்சன் டிவிகளை, இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளரும், கோடாக் பிராண்ட் லைசென்ஸ் உரிமையாளருமான சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடேட் (SPPL) நிறுவனம், விற்க இருக்கிறது.
நுகர்வோர் மின்னணு பொருட்களின் பிராண்டான பிரான்சை சேர்ந்த தாம்சன் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய டிவிக்களை வெளியிடும் நிகழச்சியை புதுடெல்லியில் நடத்தியது. ஏப்ரல் 13 முதல் ப்ளிப்கார்ட்டில் மட்டுமே இது விற்பனைக்கு வருகிறது. இன்றைய வெளியீட்டின் மூலம் 14 ஆண்டுகள் கழித்து இந்திய தொலைக்காட்சி சந்தையில் தாம்சன் மீண்டும் நுழைகிறது.
சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமீபத்தில், கோடாக் 50இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் வெளியிட அறிவிப்பது வெளியிட்டது. ரூ34,999 விலையில் வரும் இந்த ஸ்மார்ட் டிவி, பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
தொலைக்காட்சி, டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ், டிஜிட்டல் இமேஜிங், எல்.சி.டி மானிட்டர், லைட்னிங் மற்றும் சில ஆட்டோமேசன் பொருட்களுக்கு பெயர்பெற்றது தாம்சன் நிறுவனம். எல்.ஈ.டி மற்றும் அல்ட்ரா எச்.டி டிவிக்களை எடுத்துக்கொண்டால், தாம்சன் 7 வித ஸ்மார்ட் டிவிக்களை ஐரோப்பியாவில் விற்கிறது.
அவை அனைத்தும் பயனர்களின் வீட்டு வலையமைப்பு(நெட்வொர்க்) மற்றும் சேமிப்பு கருவிகளில் எளிதாக இணைக்கக்கூடியவை.