ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடி..!ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் அறிமுகம்..!

Published by
Dinasuvadu desk

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்து – கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்கிற ஒரு வாய்ப்பை அறிவித்துள்ளது.

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்பது ரூ.251/- மதிப்புள்ள ஒரு ரீசார்ஜ் பேக் ஆகும். இது 102ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை மொத்தம் 51 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். அதாவது ஐபிஎல் 2018 போட்டி முடிவு பெறும் நாள் வரை நன்மைகளை வழங்கும். இந்த பேக்கின் கீழ், நாள் ஒன்றிற்கு அதிக வேக 2 ஜிபி தரவு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வரம்பை மீறியதும், உங்களின் இணைய வேகம் 64kbps ஆகக் குறைக்கப்படும். இது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் ஒரு ரீசார்ஜ் திட்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது, ஜியோவின் மற்ற காம்போ திட்டங்களை போல வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற பிற நன்மைகளை எல்லாம் வழங்காது என்று அர்த்தம்.

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.? அதை பெறுவது எப்படி.?

இருப்பினும், நீங்கள் ஏற்கனவே வேறு சில ஜியோ திட்டங்களை ரீசார்ஜ் செய்து இருந்தால், உங்களின் தற்போதைய தினசரி டேட்டா வரம்புடன் ரூ.251/-ன் 2ஜிபி டேட்டா இணைக்கப்படும். அதாவது ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸிலிருந்து, நாள் ஒன்றிற்கு கிடைக்கும் 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா உங்களின் வழக்கமான டேட்டா வரம்புடன் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி வழங்கும் ரூ.399/-ஐ ரீசார்ஜ் செய்து உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அத்துடன் சேர்த்து ரூ.251/-ஐ ரீசார்ஜ் செய்ய, மொத்தம் நாள் ஒன்றிற்கு 3.5 ஜிபி தரவு அளவிலான டேட்டா கிடைக்கும்.

 01:  http://www.jio.com/en-in/4g-plans க்கு செல்லவும். அங்கு இதர ஜியோ திட்டங்களுடன் சேர்த்து, கிரிக்கெட் பேக் ஆன ரூ.251/- தொகுக்கப்பட்டு இருக்கும். இதை நீங்கள் உங்களின் மைஜியோ ஆப் வழியாகவும் அணுகலாம்.

 02: ஒருமுறை நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடிவு செய்த பின், உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். பின்னர் ரீசார்ஜ் வெற்றி அடைந்தது என்கிற என்கிற தகவல் காட்சிப்படும் வரை கேட்கப்படும் அனைத்து ஆன்-ஸ்க்ரீன் வழிமுறைகளையும் பின்பற்றவும்.

வழிமுறை 03: ரீசார்ஜ் முடிந்த பின்னர், ஜியோடிவி பயன்பாட்டை திறக்கவும். அங்கு நீங்கள் விரும்பும் அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஆன்லைனில் பார்க்கலாம்.

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

5 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

5 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

5 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

6 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

6 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

7 hours ago