Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது.
ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ் செய்யும் போது அதனுடன் சேர்ந்து கிடைக்கும் ஹாட்ஸ்டார் சாந்தாவின் உரிமைக்காக தங்களுக்கு விருப்பமான திட்டங்களை தேர்வு செய்து ரீஜார்ச் செய்து ஹாட்ஸ்டாரை கண்டு கழித்து வருகிறார்கள். ஒரு சிலர் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்யாமல் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்வார்கள்.
ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் ரூ.2999க்கு வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் செலவு செய்து ரூ.3178 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் நமக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி உரிமை கிடைக்கிறது. ரூ.2999 திட்டத்தில் 365 நாள் வேலிடிட்டி உடன் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதில், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட், ஆகிய ஓடிடி தளங்களின் இலவச உரிமையும் கிடைக்கிறது.
ஆனால், அந்த ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக இன்னும் ரூ.179 அதிகமாக செலவு செய்து ரூ.3178 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் நமக்கு 12 மாதங்களுக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் கிடைக்கிறது. மேலும், இந்த ரூ.3178 திட்டத்தில் தினமும் எத்தனை ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பதனை பற்றியும் விவரமாக பார்க்கலாம்.
ரூ.3178 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிப் டேட்டா கிடைக்கிறது. 5 பயன்படுத்துபவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ்கால் இருக்கிறது. அதைப்போல, 1 வருட ‘டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலில் பயன்படுத்தி கொள்ளும் வசதியும் வருகிறது. கண்டிப்பாக போனில் ஹாட்ஸ்டார் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் உதவியானதாக இருக்கும். இந்த ரீசார்ஜ் திட்டம் மை ஜியோ (MYJIO) செயலியில் இல்லை என்றால் கூட கவலை வேண்டாம். உங்களுடைய வாட்ஸ்அப் சென்று MyJio Offers மூலம் கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…