சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பக்கா பிளான்?
ரிலையன்ஸ் ஜியோ அடுத்ததாக ஜியோபாரத் V3 மற்றும் V4, ஆகிய போன்களை ரூ.1099 விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து இழுப்பது போல, தற்போது ( V3,V4 ) என்ற இரண்டு பட்டன் போன்களை தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்து இருக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகம் செய்யவேண்டும் என்பது சிறிய வயது முதல் பெரிய வயது வரை இருப்பவர்களுக்கு ஆசையாக இருக்கிறது. அப்படி பெரிய வயதில் இருப்பவர்களுக்குப் பட்டன் போன்களில், ஆண்ட்ரைடு போன்களில் இருக்கும் வசதி பட்டன் ஃபோன்களில் இருந்தால் உபயோகம் செய்ய மிகவும் எளிமையாக இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.
அந்த சமயத்தில் தான் ஜியோ நிறுவனம், பட்டன் வடிவில் “ஜியோ பாரத் போன்” என்ற பெயரில் ஆண்ட்ராய்டு போன்களில் உபயோகம் செய்யும் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டு வந்தது. இந்த போனின் அறிமுகம் வந்த பிறகு அத்துடன் சிம் கார்டுகளும் சேர்த்து ஒரு ஆண்டுக் கால ரீசார்ஜ் திட்டத்துடன் வந்த காரணத்தினால் வயதான பலர் இந்த போனை வாங்கி உபயோகம் செய்தனர்.
இந்த போனின் விற்பனையும், அந்த சமயம் அமோகமாக இருந்தது. அதன் பிறகு, இடையில் இந்த போன் சில ஆண்டுகள் விற்பனையில் இல்லாமல் போனது. இந்த சூழலில் மீண்டும் இந்த போனை கொண்டு வந்தால் நன்றாக விற்பனையாகும் என்ற நோக்கத்தோடு அதற்கு அடுத்த மாடலாக V3,V4 என இரண்டு மாடல்களை ஜியோ கொண்டு வந்திருக்கிறது.
அந்த மாடல்களில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது விலை எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம்.
இரண்டு மாடல்களிலும் 1000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு நாள் முழுவதும் தாங்கும். கூடுதல் சேமிப்பு தேவைப்படும் பயனர்களுக்கு, JioBharat V3 மற்றும் V4 ஆகியவை 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டு வந்துள்ளது.
1.77 இன்ச் டிஸ்ப்ளே, 48 எம்பி ரேம் அதைப்போல, இரண்டு மாடல்களிலும் 23 இந்திய மொழிகளை வைத்துக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் ரூ.1099 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் போன் வாங்கும் முதல், மாதத்தில் ரூ.123 ரீசார்ஜ் திட்டத்துடன் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 14 ஜிபி டேட்டா வசதியுடன் வருகிறது. இந்த விலைக்கு இந்த போன் சரியானதா என்று கேட்டால் நிச்சியமாகச் சரியானது தான்.
மேலும், இந்த போன்களை இப்போது அம்பானி அறிமுகம் செய்ய முக்கிய காரணமே தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது என்பது தான். தீபாவளி என்றால் பலரும் போன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது உண்டு. எனவே, இப்போது இந்த போனை அறிமுகம் செய்தால் கண்டிப்பாக நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஃபோனின் விற்பனையையும் அதிகமாகும் என்பதால், அம்பானி திட்டமிட்டு இந்த போன்களை இந்த நேரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறார்.