ஏர்டெல், வோடபோன்- ஐ ஓரம் கட்டிய ஜியோ! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்!

airtel vodafone jio

மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வரும் சிம் கார்டுகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் என்று சொல்லலாம். இந்த சிம் கார்டுகளின் நிறுவனங்கள் மாற்றி மாறி போட்டி போட்டுகொண்டு ஆப்பர்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றை மிஞ்சும் அளவிற்கு 1 வருடத்திற்கான ரீசார்ச் பிளானில் சலுகையை கொண்டு வந்தது.

ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் : 2024 புத்தாண்டை முன்னிட்டு ஜியோ ரூ. 2,999-க்கு ரீசார்ஜ்  செய்தால் வாடிக்கையாளர்கள் 389 நாட்களுக்கு திட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ரூ.2,999 ரீசார்ஜ் பேக் பிளான் இருந்தது. தினமும் மக்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம் என்ற அம்சம் இருந்தது.

52 நாட்கள் வேலிடிட்டி! ரூ.299-க்கு அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த BSNL!

இந்த திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் மட்டும் அதிகப்படுத்தாமல் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா பயன்படுத்தி கொள்ளலாம் என கொண்டு வந்தது. இதனால் பயனர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜியோவை தவிர மற்ற இரண்டு சிம்கார்டுகளான ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் இந்த வருடாந்திர ரீசார்ச் திட்டம் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறதா இல்லையா என்ற விவரத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஏர்டெல்

  • ஏர்டெல்லை பொறுத்தவரையில் வருடாந்திர ரீசார்ச் திட்டம் ரூ. 3,350 க்கு வருகிறது. ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் வருகிறது. இதில் ஜியோவை ஒப்பிட்டு பார்க்கையில் ஜியோவின் ரீசார்ச் விலை குறைவு தான். அதைப்போல குறைவான விலையில் ஏர்டெல்லை விட அதிகமான வேலிடிட்டியம் கிடைக்கிறது.

வோடபோன்

  • வோடபோன் சிம்மை பொறுத்தவரையில் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் ரூ 3,099-க்கு வருகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அது மட்டுமின்றி நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி வரை ஆலிமிடெட் டேட்டாவையும் வழங்குகிறது. இருந்தாலும் ஜியோவை ஒப்பிட்டு பார்க்கையில்  வோடபோனை விட குறைவான விலையில் அதிக வேலிடிட்டியும் கிடைக்கிறது.

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜியோ கொண்டு வந்துள்ள இந்த அசத்தல் திட்டம் விரைவில் எந்த தேதியில் இருந்து செயல்படும் எனவும் ஜியோவே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்