ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் போது ஒரே நேரத்தில் 3.2 கோடி பார்வையாளர்களுடன் ஜியோசினிமா ஹாட்ஸ்டார் சாதனையை முறியடித்துள்ளது.
ஜியோ சினிமா
அம்பானியின் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா தற்போது மிகவும் பிரபலமான ஓடிடி தளமாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதற்கு காரணமே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தான் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா அனைவரும் பார்க்கும்படி இலவசமாகவே ஒளிபரப்பு செய்தது. இதன் மூலம் ஜியோ சினிமா 10 மில்லியன் கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றனர்.
சாதனை படைத்த ஜியோ சினிமா
ஐபிஎல் 2023 போட்டியில் ஜியோசினிமா பார்வையாளர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது. அந்த வகையில், மே 29, (நேற்று ) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியில் புதிய சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில், குஜராத் அணியின் பேட்டிங் செய்யும்போது 18-வது ஓவர்களில் ஒரே நேரத்தில் 3.2 கோடி பார்வையாளர்கள் ஜியோ சினிமாவில் ஐபிஎல்லை கண்டு ரசித்தார்கள். இதன் மூலம் ஜியோசினிமா இதற்கு முன்பு ஹாட்ஸ்டார் படைத்த சாதனையை முறியடித்தது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2.53 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருந்தது.அந்த சாதனையை ஜியோ சினிமா முறியடித்தது.
ஹாட்ஸ்டாரை மிஞ்சும் ஜியோ சினிமா
கடந்த ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கி வைத்திருந்த நிலையில், மாதம் 149 ரூபாய் செலுத்தினால் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசதி இருந்தது. எனவே, பலரும் மாதம் சந்தா செலுத்தி ஐபிஎல்லை கண்டு கழித்தனர். இதனை தொடர்ந்து ஜியோ சினிமா, இந்த ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்று அதனை இலவசமாகவே ஒளிபரப்பு செய்தது.
இதன் மூலம் ஜியோ சினிமா கூடுதலாக 10 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றனர். மேலும், ஐபிஎல் இலவசமாக பார்க்கும் வசதியை ஜியோ சினிமா கொண்டு வந்த நிலையில், ஹாட்ஸ்டார் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்தனர். அவர்கள் ஜியோ சினிமாவின் சப்ஸ்கிரைப்ராக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் ஜியோ சினிமாவின் மவுசு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…