ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனம், சேவை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத சூழலில் உள்ள ஏர்செல் நிறுவனம், தம்மை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாட்களை தங்களின் இதயமாக ஏர்செல் நிறுவனம் கருதுவதாகவும், அவர்களுக்காக ஏதேனும் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து கொள்வது பற்றி ஆலோசித்து வருவதாகவும் ஏர்செல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இதுகுறித்து ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.