இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை..! வெளியானது பட்டியல்..!
இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைகள் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை இந்தியாவின் 11 மாநிலங்ககளில் உள்ள 20 நகரங்களில் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிவிப்பில், அஸ்ஸாம், பீகார், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 நகரங்களில் ட்ரு 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை 277 ஆக உள்ளது. மேலும் இது போன்ற பெரும்பாலான நகரங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் மற்றும் ஒரே ஆபரேட்டர் என்ற பெருமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.
ட்ரு 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க ஜியோ வெல்கம் ஆஃபர் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Media Release – Jio Launches True 5G in 20 More Cities Taking the Benefits of True 5G to 277 Cities Across the Nation pic.twitter.com/BJZ1Na7ydb
— Flame of Truth (@flameoftruth) February 21, 2023