itel a05s [File Image]
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐடெல் (Itel), சமீபத்தில் A சீரிஸில் ஐடெல் A05s (Itel A05s) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் ஆரம்பத்தில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே அறிமுகமானது. இப்போது ஐடெல் A05s போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை வெளியிட்டுள்ளது.
மேலும், இதில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐடெல் A05s இல் இருக்கக்கூடிய 5 எம்பி கேமரா அமைப்பிற்குப் பதிலாக, 8 எம்பி பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. கிரிஸ்டல் ப்ளூ, குளோரியஸ் ஆரஞ்சு, மெடோ க்ரீன் மற்றும் நெபுலா பிளாக் ஆகிய நான்கு வெவ்வேறு வண்ணங்களில் உள்ளது.
இதில் 4G LTE, ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதன் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது. இதன் ஸ்டோரேஜை 1 டிபி வரை உயர்த்த முடியும். பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி ரேமை கிட்டத்தட்ட 8 ஜிபி வரை விரிவாக்க முடியும்.
ஐடெல் A05s இன் 2 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் ரூ.6,499 என்ற விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் புதிய 4ஜிபி ரேம் வேரியண்ட் இப்போது ரூ.6,099 என குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் இந்தியாவில் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…