டீப்ஃபேக்குகளின் புழக்கத்தைத் தடுப்பது  சமூக ஊடக தளங்களின் பொறுப்பு – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

chandrasekar

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதற்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில்  டீப்ஃபேக்குகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து கூறுகையில், நவம்பர் 24 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களுடனும் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது, அந்த கூட்டத்தில், டீப்ஃபேக்குகள் குறித்த தற்போதைய சட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோக்கள் பரவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இணைய பாதுகாப்பு மற்றும் டீப்ஃபேக்குகளின் புழக்கத்தைத் தடுப்பது  சமூக ஊடக தளங்களின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீப்ஃபேக்குகளை தடுக்க போதுமான  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அந்த சமூக ஊடகங்கள் மீது வழக்குத் தொடருவது உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்