டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம்.! மாஸ்டர் பிளான் ரெடி…
டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் தங்கள் செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். வேலையாட்கள் குறைப்பு, அதிகாரபூர்வ புளு டிக்-கிற்கு கட்டணம் என பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பயனர்கள் மத்தியில் டிவிட்டர் வேகமாக வளர்ந்து வருகிறது.
டிவிட்டரில், பயனர்கள் கருத்து பதிவிடலாம், தனியாக மற்ற பயனாளருக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளலாம். புகைப்படம், குறிப்பிட்ட அளவிலான விடீயோக்களை பதிவிடலாம். இதனை மேம்படுத்தி வாட்டசாப் போல கால் பேசும் வசதியை மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது இதற்கு போட்டியாக, பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. டிவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக அதில் பயனர்கள் கருத்துக்கள் பதிவிடும் வகையில் மாற்றங்கள் கொண்டு வர ரகசியமாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.