இஸ்ரோ, ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைகோள்களை விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் அக்டோர்பர் மாதம் 800 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 2 செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் எல்லை கண்காணிப்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கை கோள்களை அனுப்பவுள்ளது.
அதில் முக்கியமாக இந்திய விமானப் படைக்கென பிரத்யேகமாக ஜி-சாட் 7A என்ற செயற்கை கோளையும், ரிசாட்-2A என்ற கண்காணிப்பு செயற்கை கோளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஜி-சாட் 11, ஜி-சாட்-29 உள்ளிட்ட செயற்கைகோள்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,