தமிழகத்தின் முதல் இஸ்ரோ தலைவர்!சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி ….
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கபட்டுள்ளார்.இதனால் அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிபடுத்தினர் .
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக உள்ள சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டதற்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையைச் சேர்ந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சிவன் படித்த சரக்கல்விளை அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அவரது நண்பர்கள், மாணவ மாணவி களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
source: dinasuvadu.com