சந்திரயான் -2 விண்கலத்தை விரைவில் விண்ணில் ஏவ திட்டம்!
இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 விண்கலத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அது முடியாவிட்டால் அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்வளம் குறித்து தெரிவிக்க கருவி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கருவியை முதற்கட்டமாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துக்காக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், ஜிசாட் 11 என்ற செயற்கைக்கோள் பிரான்சில் இருந்து விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.