மக்கள் இன்டெர்நெட்டில் போக்கும் அநேக நேரங்கள் கூகிள்,பேஸ்புக் நிறுவனங்களின் தளங்களில்தான். இவ்வாறு மக்களை முழ்கி கிடக்க செய்யும் அளவிற்கு பல வசதிகளை கொடுக்கிறது கூகுள் நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியாக புரிந்து அதை எளிமையாக அவர்கள் கையில் வழங்குகின்றனர்.
உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் கூகுள் மேப் உதவியுடன் நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிடலாம். ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் பலர் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு யாரிடமும் விசாரிப்பதில்லை நேடியாக கூகுள் ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உதாரணமாக நீங்கள் உங்கள் அருகில் உள்ள உணவகம் குறித்து தேடுகின்றீர்கள் என்றால் அருகில் உள்ள உணவகம் எது, அதில் எது சைவ உணவகம், எது அசைவ உணவகம், என பல தகவல்களை தரும். உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வானிலை தகவல்கள் நீங்கள் வெளியூர் பயணம் செய்கிறீர்கள் என்றால் கூகுள் மேப் ஆப்களில் அதை தேடும் போது நீங்கள் செல்லும் ஊரில் வானிலை எப்படி இருக்கிறது? நீங்கள் செல்லும் நேரத்தில் வானிலை நிலவரங்கள் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் செல்லும் பாதையில் உள்ள வானிலை நிலவரங்கள் என்ன என வானிலை குறித்த முழு தகவல்களையும் நீங்கள் பெற முடியும். சரியான பாதையை வழங்கும் நீங்கள் இருக்கும் இடத்தையும், செல்ல வேண்டிய இடத்தையும் கூகுளில் வழங்கியுடன் அது நீங்கள் செல்ல வாய்ப்புள்ள பாதைகளை ஒரே ஸ்கிரில் வழங்கும், அதில் சிறந்த பாதையை தனியாக எடுத்துக்காட்டும்.
வெளிநாடுகளில் சிலர் தங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும் போது கூகுள் ஆப்ஸ் மட்டும் இயக்கும் வகையில் ஒரு போனை தங்கள் கூகுள் மேப்புடன் இணைத்து குழந்தையின் பள்ளி பேக்கில் வைத்து விடுகின்றனர். அதை வைத்து குழந்தையின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றனர். இதன் மூலம் குழந்தை கடத்தலை தடுக்கலாம்.
கூகுள் மேப்பில் நாம் பயணம் செய்யும் போது அந்த பயணம் குறித்த தகவல் அதாவது நாம் பயணம் செய்யும் ரோடு அடுத்து எவ்வளவு தூரத்தில் எந்த திசையில் திரும்ப வேண்டும், திரும்ப வேண்டிய இடம் அருகில் வந்ததும் அதற்கான தகவல் என இது போன்ற தகவல்களை வாய்ஸ் மூலமாக தருகிறது. மேலும் இந்த வாய்ஸ் கமெண்ட் ஐபோன் பயன்பாட்டாளர்ளுக்கு மிக துள்ளியமாக புரியும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் கூகுள் நிறுவனம் பல மொழிகளில் தங்கள் சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக தமிழ் மொழியும் அதில் அடங்கும். என உங்களுக்கு வேண்டிய தகவல்களை உங்கள் மொழியிலேயே வழங்குகிறது, கூகுள் நிறுவனம்.
நீங்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் நீங்கள் எதில் செல்கிறீர்கள் என்பதை பொருத்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும். எத்தனை மணிக்கு நீங்கள் அங்கு அடைய வாயப்புள்ளது என்ற தகவல்களையும் தரும்.
கூகுள் சில பகுதிகளில் மட்டும் ஸ்டிரீட் வியூ என்ற வசதியை தருகிறது. அந்த வசதி மூலம் நீங்கள் தெருவில் நடந்து செல்வது போன்ற உணர்வை பெறலாம். இந்த தொழிற்நுட்பம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. எனினும் அனைத்து இடங்களிலும் இந்த வசதியில்லை இந்தியாவில் சில தனியார் இடங்ளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல வசதிகள் கூகுள் நிறுவனம் உங்களுக்காக தருகிறது. இதை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய தகவல்களை நீங்கள் உடனே பெறுவதுடன் உங்கள் பயணத்தையும் எளிதாக திட்டமிடலாம் அதே நேரத்தில் இந்த கூகுள் மேப் ஆப்பில் குறைகள் இல்லாமலும் இல்லை.
ஐபோனில் ஸிங்க் இல்லை ஆப்பிள் நிறுவன மொபைல், ஐபேட் ஆகியவற்றில் கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் மேப்புடன் கூகுள் மேப்பை ஸிங்க் செய்ய முடியவில்லை , இதில் உள்ள தகவல்களை அதற்கும், அதில் உள்ள தகவல்களை இதற்கும் பெறமுடிவதில்லை.
லேன் திசை காட்டுவதில்லை நீங்கள் ஸ்டிரீட் வியூ பயன்படுத்தும்போது நீங்கள் செல்லும் வாகனத்தையும் திசையையும் பொறுத்து நீங்கள் ரோட்டின் எந்த பகுதியில் செல்ல வேண்டும் என்ற தகவலை அது சொல்லுவதில்லை. மாற்று பாதையை காட்டுவதில்லை நாம் பயணத்தின் போது டிராபிக் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ நாம் மாற்று பாதையில் பயணிக்க விரும்பினால் அந்த பாதையை கூகுளில் பெற வழியில்லை. எனினும் நாமா கண்டுபிடித்து அந்த பாதையில் சில தூரம் சென்ற பிறகு நமது தேவையை அறிந்து நாம் செல்ல வேண்டிய பாதையை பரிந்துரைக்கும்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…