நீங்கள் வாங்கும் ஃபோன் ஒரிஜினலா ..? கண்டுபிடிப்பது எப்படி .. இதோ உங்களுக்கான டிப்ஸ் ..!

How to find is the phone you are buying original..?[file image]

Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம்.

ஐ ஃபோன்

ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று வருகிறார்கள். ஆனால் அது நமக்கு ரசிது அதாவது பில் இல்லாமல் கிடைக்கும் என கூறி பழைய போன் அல்லது ஐபோனை போலவே இருக்கும் க்ளோன் (Clone) போனை நம்மிடம் கொடுத்து விட்டு ஏமாற்றி விடலாம். அப்படி மொபைல் கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ நாம் வாங்கும் ஐபோனை அது புதியது தான் என்று எப்படி சரி பார்த்து வாங்குவந்து என்பது குறித்த சில டிப்ஸ்கலை தற்போது பார்ப்போம்.

நாம் வாங்கும் ஐபோனின் அட்டைக்கு பின் சீரியல் நம்பர் என்று ஒன்று இருக்கும் அந்த நம்பரை குறித்து வைத்து https://checkcoverage.apple.com/ என்ற இணையத்தில் சீரியல் நம்பர் கேட்கும் இடத்தில் நாம் வாங்க போகும் போனின் அந்த சீரியல் நம்பரை அதில் பதிவிட்டு பார்த்தால். அதில் அந்த போனின் அனைத்து விவரங்களும் வந்து விடும். குறிப்பாக அந்த போன் இதற்கு முன் உபயகோகித்து உள்ளனரா என்றும் பார்த்து கொள்ளலாம்.

அதே போல செகண்ட்-ஹாண்ட் போனை புதியது என்று ஏமாற்றி நம்மிடம் விற்க முடியன்றாலும் அதற்கும் சில டிப்ஸ்களை வைத்து நாம் அது புதியாதா ? இல்லை ஏற்கனவே அந்த போனை உபயோகித்து உள்ளனரா ? என்றும் தெரிந்து கொள்ளலாம். அது என்னவென்றால் ஐபோனில் இருக்கும் செட்டிங்ஸ்க்குள் (Settings) சென்று அதில் அபௌட் (About) இல் சென்று பார்த்தால் அதில் மாடல் நம்பர் இருக்கும். அந்த மாடல் நம்பர் M என்று தொடங்கினால் அது உண்மையாகவே புதிய ஐபோன் தான் என்று அர்த்தம்.

ஒரு வேலை அந்த மாடல் நம்பர் F என்ற எழுத்தில் தொடங்கினால் அந்த ஐபோனின் சில உள்ளிருக்கும் பாகங்களை மாற்றியமைத்து உள்ளார்கள் என்று அர்த்தம். அதே போல அந்த மாடல் நம்பர் N என்ற எழுத்தில் தொடங்கினாள் அதில் ஏதோ பிரச்சனை இருந்து அதை சர்வீஸ் செய்து வந்த போன் என்று அர்த்தம்.

அதே போல P என்ற எழுத்தில் தொடங்கினால் அது தனி ஒருவருக்காக பிரத்யேகமாக சில மாற்றங்கள் செய்த போன் என்று அர்த்தம். அதனால் இதனை வைத்து நாம் ஷோ ரூம் அல்லது மற்ற கடைகளில் வாங்கும் ஐபோன் உண்மையானது தானா என்று சரி பார்த்து கொள்ளலாம். முடிந்த அளவுக்கு நாம் ஐபோன் ஷோரூமில் சென்று ஐபோனை வாங்குவது தான் உண்மைகவும் ஒரு வித த்ரிப்தியாகவும் இருக்கும்.

ஆண்ட்ராய்டு

அதைப்போல ஆண்ட்ராய்டு போன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதனை கண்டுபிடிக்கவும் சில டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம். முதலில் உங்களுடைய கூகுள் பிளே ஸ்டோரில் CPU-Z என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பிறகு அந்த செயலிக்குள் சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுடைய போன் என்ன மாடல் உங்களுடைய போனில் பேட்டரி வசதி எந்த அளவில் இருக்கிறது. எத்தனை ஜிபி ரேம் என எல்லா விவரமும் இருக்கும்.

ஒருவேளை உங்களுடைய போன் பழைய போன் ஆக இருந்தால் நீங்கள் அதனை வைத்து கூட கண்டு பிடித்துக்கொள்ளலாம். அதாவது பேட்டரி லெவல் ரொம்பவே குறைந்து இருந்தது என்றால் அது பழைய போன் தான். ஆண்ட்ராய்டு போன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதனை கண்டுபிடிக்க இன்னொரு வழிமுறை கூட இருக்கிறது. அது என்னவென்றால், உங்களுடைய போனின் IMEI  நம்பர் வைத்து தான். உங்களுடைய போனில் *#06# என்ற எண்ணிற்கு ஒரு கால் செய்தீர்கள் என்றால் உங்களுடைய போனின் IMEI நம்பர் கிடைத்துவிடும்.

அந்த சீரியல் நம்பரை காப்பி செய்துவிட்டு https://www.imei.info/ என்ற இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய போனின் IMEI நம்பரை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போனின் மாடல் என்ன போனுடைய பேட்டரி ரேம் மற்றும் கேமரா விவரம் என எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் (warranty) உத்தரவாதம் இருக்கும். அதனை பார்த்து போனின் பதிவு தேதி மற்றும் முடிவு தேதி பார்த்து கொள்ளலாம். இனிமேல் போனை இரண்டாவதாக வாங்கப்போகும் போது இதனை எல்லாம் பார்த்துவிட்டு வாங்கினால் நன்றாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்