Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது நெட் (Net) மிகவும் மெதுவாக இருப்பது பெரிய தலைவலியை கொடுக்கும். அப்படியான சூழ்நிலையில், நம்மளால் நமக்கு பிடித்ததை டவுன் லோட் செய்யவும் முடியாது. அதேபோல நமக்கு விருப்பப்பட்ட கேம்களையும் விளையாடவும் முடியாது.
அப்படி நெட் யாருக்கெல்லாம் ரொம்பவே மெதுவாக இருக்கிறதோ அவர்களுக்காக நாங்கள் சூப்பர் ஸ்டிப்ஸ் கொண்டு வந்து இருக்கிறோம். அந்த சில டிப்ஸ்களை பாலோவ் செய்தால் கண்டிப்பாக உங்களுடைய போன் நெட் வழக்கத்தை விட சற்று வேகமாக இருக்கும். அது என்னென்ன டிப்ஸ் என்பதனை விவரமாக பார்க்கலாம்.
முதலில் அதிகமாக படங்களை டவுன் லோட் செய்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். பலரும் தங்களுக்கு பிடித்த படங்களை டவுன் லோட் செய்யும்போது சில சமயம் எம்பி கணக்கில் டவுன் லோட் ஆகாமல் கேபி கணக்கில் டவுன் லோட் ஆகும். அப்படியான நேரத்தி நீங்கள் உங்களுடைய போனை Airplane mode ஆன் செய்துவிட்டு திரும்ப ஆப் செய்தால் 20 நொடிகள் வரை நீங்கள் டவுன் லோடு செய்வது வேகமாக டவுன் லோட் ஆகும்.
ஆனால், 20 நொடிகள் மட்டும் தான் அந்த வேகத்தில் இருக்கும். திரும்பவும் அதே வேகத்தில் இருக்கவேண்டும் என்றால் திரும்பவும் அதைப்போலவே, Airplane mode ஆன் செய்துவிட்டு திரும்ப ஆப் செய்யுங்கள். இது ஒரு டிப்ஸ். அடுத்த டிப்ஸ் என்னவென்றால், நீங்கள் உடனடியாக உங்கள் போனில் இருக்கும் தேவை இல்லாத செயலியை நீக்கவேண்டும்.
அதாவது நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் செயலியை நீக்கவேண்டும். ஏனென்றால், பேக் ரவுண்டில் அந்த செயலி நெட்டை குடித்துக்கொண்டு இருக்கும். எனவே, தினமும் 1.ஜிபி, 1.5 ஜிபி டேட்டா வைத்து இருப்பவர்களுக்கு வேகமாக தீர்ந்துவிடும். எனவே, பயன்படுத்தாமல் இருக்கும் செயலியை உடனே நீக்குங்கள். இதனை செய்வதன் மூலமும் உங்களுடைய நெட் வேகமாக இருக்கும்.
அதைப்போல, இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்துபவர்களாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் நீங்கள் முதல் ஸ்லாட்டில் போட்டு கொண்டு அந்த சிம் மூலம் டேட்டாவை பயன்படுத்தினால் வேகமாக இருக்கும். அப்படி இல்லை இரண்டாவது ஸ்லாட்டில் சிம் போட்டு நெட் பயன்படுத்திவருபவர்களும் முதல் ஸ்லாட்டில் போட்டு கொள்ளுங்கள். இந்த வழிகளை பாலோவ் செய்தாலே போதும் உங்களுடைய நெட் வேகமாக இருக்கும்.
உங்களுடைய நெட் எந்த அளவிற்கு வேகமாக இருப்பது என்பதை பார்ப்பதற்கான வசதி கூகுளில் இருக்கிறது. அது எப்படி என்றால் நீங்கள் உங்களுடைய குரோம்க்கு (chrome) சென்று இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் (internet speed test) என்று தேடுங்கள். அதில் வரும் run speed test என்பதை க்ளிக் செய்தீர்கள் என்றால் உங்களுடைய நெட்வொர்க் எந்த அளவிற்கு வேகமாக இருப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…