கடந்த சில மாதங்களாக போல்டபெல் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்கள் பயனர்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், போல்டபெல் ஸ்மார்ட்போனை தயாரித்து சந்தைகளில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்தவகையில் ஒன்பிளஸ் தனது முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓப்பனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போது, ஒன்பிளஸ் போல்டபெல் ஸ்மார்ட்போனின் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உள்ளிட்ட சில அம்சங்கள் இதற்கு முன்பு கூட சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஸ்பிளே:
ஒன்பிளஸ் போல்டு ஸ்மார்ட்போன் ஆனது 2268×2440 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 7.82 இன்ச் அளவுள்ள க்யூஎச்டி பிளஸ் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதோடு வெளிப்புறம் 1116×2484 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.31 அளவுடைய எஃப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு டிஸ்ப்ளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிராசஸர்:
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 எஸ்ஓசி பிராசஸருடன், ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. அதனுடன் நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உள்ளது. இது முன்னதாக வெளியான பிராசஸர் அம்சத்தை ஒத்துள்ளது.
கேமரா:
இதன் பின்புற கேமரா அமைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 எம்பி கேமரா உள்ளது. இதனால் அதிக தெளிவுடன் கூடிய போட்டோ மற்றும் வீடியோவைப் பதிவு செய்ய முடியும்.
பேட்டரி:
ஒன்பிளஸ் போல்டு பேட்டரியைப் பொறுத்தவரை 4,805 mAh திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கும். இதனை சீக்கிரமாக சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை பூஜ்ஜியத்திலிருந்து நூறு சதவீதம் சார்ஜ் செய்ய 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.
ஸ்டோரேஜ்:
தற்போது உள்ள தகவலின் படி, ஒன்பிளஸ் போல்டு ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…