கடந்த டிசம்பர் 12ம் தேதி ஐக்யூ (iQOO) நிறுவனம் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஐக்யூ 12 5ஜி ஆனது இந்தியாவின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.
இதில் 1.5K பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேயில் வெட் டச் டெக்னாலஜி இருப்பதால் கை ஈரமாக இருந்தாலும் டிஸ்பிளே நன்றாக வேலை செய்யும். ஐக்யூ 12 5ஜி ஆனது லெஜண்டரி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இதில் OIS உடன் 50 எம்பி ஆஸ்ட்ரோகிராபி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இதில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் மற்றும் நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.
இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.52,999 ஆகும். 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.57,999 ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் ஐக்யூ ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த போனை எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை வாங்கும் நபர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…