முதல் விற்பனையில் ரூ.3000 தள்ளுபடி.! களத்தில் இறங்கியது ஐக்யூ 12 5ஜி.!

iQOO125G

கடந்த டிசம்பர் 12ம் தேதி ஐக்யூ (iQOO) நிறுவனம் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஐக்யூ 12 5ஜி ஆனது இந்தியாவின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

இதில் 1.5K பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேயில் வெட் டச் டெக்னாலஜி இருப்பதால் கை ஈரமாக இருந்தாலும் டிஸ்பிளே நன்றாக வேலை செய்யும். ஐக்யூ 12 5ஜி ஆனது லெஜண்டரி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

உங்க ஐபோனை நீங்களே ரிப்பேர் பாக்கலாம்.! எப்படின்னு தெரியுமா.?

இதில் OIS உடன்  50 எம்பி ஆஸ்ட்ரோகிராபி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இதில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் மற்றும் நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.

விலை மற்றும் சலுகை

இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.52,999 ஆகும். 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.57,999 ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் ஐக்யூ ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்.! ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டாவின் AI.!

இந்த போனை எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை வாங்கும் நபர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.

ஐக்யூ 12 5ஜி அம்சங்கள்

  • 6.78 இன்ச் டிஸ்பிளே, 1.5K ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 nits பிரைட்னஸ்
  • அட்ரினோ 750 ஜிபியு
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்
  • ஆன்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14
  • 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ராவைட் + 64 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ்
  • 16 எம்பி செல்ஃபி கேமரா
  • 5,000 mAhலித்தியம் பேட்டரி
  • 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ்
  • லெஜண்ட் மற்றும் ஆல்பா நிறங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
RKFI -scamers
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya