iQOO 12 Series: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஐக்யூ (iQOO) புதிய ஐக்யூ 12 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதில் ஐக்யூ 12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்யூ 12 சீரிஸின் டீசர் ஆனது வெளியாகியுள்ளது. இதனை சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் ஐக்யூ அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகவில்லை. இருந்தும் டிப்ஸ்டர்கள் ஐக்யூ 12, ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை வெளியிட்டுள்ளனர்.
டிஸ்ப்ளே
ஐக்யூ 12 போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் (17.22 செ.மீ) பிஓஇ ஓஎல்இடி (BOE OLED) அமோலெட் கர்வுடு டிஸ்பிளே பயன்படுத்தப்படலாம். இந்த டிஸ்ப்ளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் இருக்கலாம். நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.
ஐக்யூ 12 ப்ரோ போனில் 2K (1440 x 3200) ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் சாம்சங் இ7 அமோலெட் டிஸ்ப்ளே (Samsung E7 AMOLED) பொருத்தப்படலாம். இந்த டிஸ்ப்ளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2700 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் இருக்கலாம். இதில் ஐபி68 ரேட்டிங் உள்ளது. இதே 6.78 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே முந்தைய மாடலான ஐக்யூ 11 ஸ்மார்ட்போனிலும் உள்ளது.
பிராசஸர்
ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களிலும் அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்படும். இதனை ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட ஓரிஜின் ஓஎஸ் 4.0 உள்ளது. இதே சிப்செட் சியோமி 14 சீரிஸிலும் உள்ளது.
கேமரா
ஐக்யூ 12 சீரிஸ் சதுர வடிவிலான எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, இதில் இருக்கக்கூடிய இரண்டு மாடல்களிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் டெலிஃபோட்டோ ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி கேமரா அடங்கும்.
செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். பனோரமா (Panorama), ஸ்லோ மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Time Lapse), ப்ரோ, சூப்பர்மூன் (Supermoon), அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட் (Long-Exposure Mode), டூயல்-வியூ வீடியோ (Dual-View Video) போன்ற கேமரா அம்சங்களுடன் வரலாம்.
பேட்டரி
200 கிராமிற்கும் குறைவான எடை கொண்ட ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆனது பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம்.
ஐக்யூ 12 ப்ரோவில் 5100 mAh திறன் கொண்ட பேட்டரி ஆனது பொருத்தப்படலாம். இதிலும் சார்ஜ் செய்வதற்காக 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம். இதில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வைஃபை 7, என்எஃப்சி, புளூடூத் 5.4, ரிமோட் கண்ட்ரோலுக்கான ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
தற்போது வெளியாகியுள்ள டீசர் மற்றும் புகைப்படங்களின் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் ரெட் மற்றும் வைட் ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. அதோடு எல்பிடிடிஆர் 5x ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வேரியண்ட்கள் இருக்கலாம். இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும். இதில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…