iQOO 12 Series: 50 எம்பி கேமரா..4,980 mAh பேட்டரி.! ஐ-க்யூ 12 சீரிஸ்..இதுதான் அறிமுக தேதியா.?

iQoo 12 Series

ஐ-க்யூ (iQOO) நிறுவனம், ஐ-க்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விரைவில் இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. அதன்படி, இந்த சீரிஸ் நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அறிமுக தேதியானது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சீரிஸில் ஐ-க்யூ 12 மற்றும் ஐ-க்யூ 12 ப்ரோ என இரண்டு மாடல்கள் இருக்கலாம். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 13ம் தேதி ஐ-க்யூ 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிவித்தது. இப்போது ஒரு வருடத்திற்குள் அடுத்த சீரிஸை வெளியிடத் தயாராகி வருகிறது.

டிஸ்ப்ளே

ஐ-க்யூ 11 போனில் இருப்பது போல ஐ-க்யூ 12 போனிலும் 2K (1440 x 3200) ரெசல்யூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே பயன்படுத்தப்படலாம். ஐ-க்யூ 12 ப்ரோ போனில் சாம்சங் இ7 அமோலெட் டிஸ்ப்ளே பொறுத்தப்படலாம்.

இந்த இரண்டு போனினின் டிஸ்பிளேவும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கலாம். டிஸ்பிளேவின் அளவு குறித்த தகவல் வெளியாகவில்லை. இருந்தாலும் ஐ-க்யூ 11-ஐ அடிப்படையாக வைத்து ஐ-க்யூ 12-ஐ உருவாக்கினால் 6.78 இன்ச் (17.22 செ.மீ) அளவுள்ள டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம்.

பிராசஸர்

ஐ-க்யூ 12 மற்றும் 12 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனிலும் அக்டோபர் 25ம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் வெளியானால் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

இதே போல ரியல்மீ ஜிடி 5 ப்ரோ, சியோமி 14 ஆகிய ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 4.0 மூலம் இயங்கலாம். ஐ-க்யூ 11 போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உள்ளது.

கேமரா

ஐ-க்யூ 12-ன் பின்புறம் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் மற்றும் 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64 எம்பி கேமரா என டிரிபில் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம்.

முன்புறம் செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். ஐ-க்யூ 12 ப்ரோவின் கேமரா அம்சங்கள் வெளியாகவில்லை. இதில் பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ், ப்ரோ, சூப்பர்மூன், அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட், டூயல்-வியூ வீடியோ போன்ற கேமரா அம்சங்கள் வரலாம்.

பேட்டரி

ஐ-க்யூ 12-ன் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்கு 4,880 mAh திறன் கொண்ட பேட்டரியும், ஐ-க்யூ 12 ப்ரோவில் 4,980 mAh திறன் கொண்ட பேட்டரியும் பொறுத்தப்படலாம். இதில் ஐ-க்யூ 12 ஆனது 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும், ஐ-க்யூ 12 ப்ரோ ஆனது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும்  50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

பிளாக், ரெட் மற்றும் வைட் ஆகிய நிறங்களில் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் 16 ஜிபி  வரையிலான ரேம் மற்றும் 512 டிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகமாகலாம். இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும். விலையைப் பொறுத்தவரையில் ஐ-க்யூ 11 ஆனது இந்தியாவில் ரூ.54,999 என்ற விலையில் விற்பனையாகிவருவதால், ஐ-க்யூ 12 ஆனது ரூ.69,000 என்ற விலையில் அறிமுகமாகலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்