iQOO 12: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உடன் களமிறங்கும் புதிய மாடல்.! எப்போது அறிமுகம் தெரியுமா.?

iQOO 12

பிரபல மொபைல் நிறுவனமான ஐ-க்யூ (iQOO) தனது தயாரிப்பில் புதிய வரவை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, ஐ-க்யூ 12 ஸ்மார்ட்போனை தயாரித்து விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஐ-க்யூ 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிவித்தது.

இப்போது ஒரு வருடத்திற்குள் மற்றொரு ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக அதன் வெளியீடு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அதன்படி, டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ஐ-க்யூ 12 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் ஐ-க்யூ 11 போனில் இருப்பது போல 1440 x 3200 (2K) ரெசல்யூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே பயன்படுத்தப்படலாம். இந்த டிஸ்ப்ளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வரை இருக்கலாம். டிஸ்பிளேவின் அளவு என்னவென்று தகவல் வெளியாகவில்லை. ஐ-க்யூ இதற்கு முந்தைய மாடலான ஐ-க்யூ 11-ஐ பின்பற்றினால் 6.78 இன்ச் (17.22 செ.மீ) அளவுள்ள டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம்.

பிராசஸர்

ஐ-க்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது இதுவரை வெளியிடப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்படலாம். அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டால், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

இதில் ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 10 அல்லது ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கலாம். ஐ-க்யூ 11 போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேமரா

ஐ-க்யூ 12-ன் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் மற்றும் 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64 எம்பி கேமரா என ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம்.

முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். இதில் பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ், ப்ரோ, சூப்பர்மூன், அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட், டூயல்-வியூ வீடியோ போன்ற கேமரா அம்சங்களுடன் வரலாம்.

பேட்டரி

ஐ-க்யூ 12-ன் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்கு 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆனது பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சீக்கிரமாக சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

ஐ-க்யூ 12-ன் ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடல் ஆனது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகலாம்.

இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும். விலையைப் பொறுத்தவரையில் ஐ-க்யூ 11 ஆனது இந்தியாவில் ரூ.54,999 என்ற விலையில் விற்பனையாகிவருவதால், ஐ-க்யூ 12 ஆனது ரூ.69,000 என்ற விலையில் அறிமுகமாகலாம்.

அறிமுகம்

குவால்காம் ஆனது தனது புதிய சிப்பை அக்டோபர் 24 முதல் 26ம் தேதிக்குள் வெளியிடும் என்று கூறப்படுகிறது. எனவே டிப்ஸ்டர் முகுல் ஷர்மா கூறியது படி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆன ஐ-க்யூ 12, நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia