iQOO 12 Series: ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு மத்தியில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என ஐக்யூ நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஐக்யூ 12-ன் வெளியீட்டுத் தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதோடு இந்த ஃபிளாக்ஷிப் போன் அமேசான் மூலம் கிடைக்கும் என்பதையும் ஐக்யூ உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் (17.22 செ.மீ) பிஓஇ ஓஎல்இடி (BOE OLED) அமோலெட் கர்வுடு டிஸ்பிளே பொருத்தபடலாம். இந்த டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸைக் கொண்டிருக்கலாம். நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது. இதற்கு முந்தைய மாடலான ஐக்யூ 11-னிலும் 6.78 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே உள்ளது.
அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்படும். இதனை ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு ஆன்ட்ராய்டு 14 ஆரிஜின் ஓஎஸ் 4.0 உடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் அக்டோபர் 27ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 14 சீரிஸிலும் உள்ளது.
ஐக்யூ 12 போனில் எல்இடி ஃபிளாஷுடன் சதுர வடிவிலான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் டெலிஃபோட்டோ ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி கேமரா அடங்கும்.
செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். பனோரமா (Panorama), ஸ்லோ மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Time Lapse), ப்ரோ, சூப்பர்மூன் (Supermoon), அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட் (Long-Exposure Mode), டூயல்-வியூ வீடியோ (Dual-View Video) போன்ற கேமரா அம்சங்களுடன் வரலாம்.
இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்த 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி ஆனது பொருத்தப்பட்டுள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம். 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதோடு ஐக்யூ 12 போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வைஃபை 7, என்எஃப்சி, புளூடூத் 5.4, ரிமோட் கண்ட்ரோலுக்கான ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் வைட் ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. அதோடு இதில் 24 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5x ரேம் மற்றும் 1 டிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வகையில் வெளியாகலாம். இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும்.
ஐக்யூ 12 சீரிஸில் ஐக்யூ 12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல்கள் உள்ளன. ஆனால் இதில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. ஐக்யூ 12 ப்ரோ மாடல் இந்தியாவில் வெளியிடுவது குறித்து ஐக்யூ இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே இந்த மாடல் சீனாவிற்கு பிரத்தியேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…