வெளியீட்டிற்கு முன்பே கசிந்த விலை.! ஐக்யூ-வின் எந்த மாடலுக்கு தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஐக்யூ 12 5ஜி போனின் உலகளாவிய வெளியிடு குறித்தும், அதன் விலையும் வெளியாகி உள்ளது.

இந்த ஐக்யூ 12 5ஜி ஆனது முதலில் டிசம்பர் 6ம் தேதி மலேசியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கழித்து டிசம்பர் 7ம் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

டிஸ்ப்ளே

ஐக்யூ 12 5ஜி போன் ஆனது 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் பிஓஇ ஓஎல்இடி (BOE OLED) அமோலெட் கர்வுடு டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். இந்த டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸைக் கொண்டிருக்கலாம். நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

16ஜிபி ரேம்..64 எம்பி கேமரா..5500 mAh பேட்டரி.! அறிமுகமானது ரெட்மி கே70இ.!

பிராசஸர்

அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனில் பொருத்தப்படும். அதோடு ஆன்ட்ராய்டு 14 ஆரிஜின் ஓஎஸ் 4.0 உடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 14 சீரிஸிலும் உள்ளது.

கேமரா

இதில் எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் டெலிஃபோட்டோ ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி கேமரா அடங்கும்.

செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ், ப்ரோ, சூப்பர்மூன், அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட், டூயல்-வியூ வீடியோ போன்ற கேமரா அம்சங்களுடன் வரலாம்.

பேட்டரி

ஐக்யூ 12 5ஜி போனில் 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம்.

ஆண்ட்ராய்டை அடுத்து ஐஓஎஸ்.! புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!

50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு வைஃபை 7, என்எஃப்சி, புளூடூத் 5.4, ரிமோட் கண்ட்ரோலுக்கான ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

லெஜண்ட் மற்றும் ஆல்பா ஆகிய வண்ணங்களில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்களில் வரலாம். இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும்.

டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா வெளியிட்டத் தகவலின்படி, ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.53,000 முதல் ரூ.55,000 வரை இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி ரூ.56,999 ஆக இருக்கும். இதற்கிடையில் ஐக்யூ 12 5ஜிஸ்மார்ட்போன் அமேசானில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

4 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

5 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

5 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

6 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

6 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

7 hours ago