கேமிங்கில் கலக்கப்போகும் ‘IQOO 11S 5G’ ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

Published by
செந்தில்குமார்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான IQOO அதன் 11-வது சீரிஸில் புதிய மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் என்பது பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்கள், புதுவிதமான மாற்றங்களை எதிர்பார்த்து, புதிதாக விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர்.

smartphone [Image source : Techs Genie ]

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் அவ்வப்போது அவர்கள் வெளியிடும் மொபைல் போனில் பலவித மாற்றங்களை செய்தும் வெளியிடுகின்றன. அந்த வகையில் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான IQOO அதன் 11-வது சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

முன்னதாகவே, அதன் 11-வது சீரிஸில் IQOO 11 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. தற்பொழுது IQOO 11S 5G என்ற ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, வெளியாகும் நாள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

டிஸ்ப்ளே (Display):

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அளவுடைய இ6 அமுலேட் (E6 AMOLED Display) டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே  1440 x 3200 பிக்சல்களின் முழு எச்டி ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது.

IQOO 11S 5G [Image source : Eastern Mirror]

மேலும் 2000 Nits வரை உச்சகட்ட பிரகாசத்தை இதனால் பெற முடியும். இது ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் (iPhone 14 Pro Max) பயன்படுத்தப்பட்ட டிஸ்ப்ளேவாகும்.

கேமரா (Camara):

இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற மூன்று கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8K வரையிலான அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோவை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் உடைய கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

iQOO 11S 5G [Image source : GSMArena]

ப்ராசசர் மற்றும் நினைவகம் (Processor and Memory):

IQOO 11S 5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen2 Chipset) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3.2 GHz, ஆக்டா கோர் பிராசஸர் (Octa Core Processor) உடன் வருகிறது. இதனால் கேம் விளையாடும் பொழுது எந்தவித இடையூறும் இல்லாமல் விளையாட முடியும்.

IQOO 11S 5G [Image source : GSMArena]

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்நினைவகத்துடன் வரவுள்ளது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) இரண்டும் சேர்ந்து மொத்தமாக 16 ஜிபி ஆக உள்ளது.

பேட்டரி:

இந்த IQOO 11S 5G ஸ்மார்ட்போன் 200W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே, இதன்மூலம் வேகமாக  ஜார்ஜ் செய்து கொள்ளலாம்.

iQOO 11S 5G [Image source : TechGoing]

விலை மற்றும் வெளியிடும் விவரம்:

IQOO 11S 5G ஸ்மார்ட்போன் 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நிறுவனம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும். தற்போது, இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்தியாவில் iQOO 11s அறிமுகம் செய்யப்பட்டால் அதன் விலை ரூ.49,990 இலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

31 minutes ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

1 hour ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

2 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

13 hours ago