பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐக்யூ (iQOO), அதன் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான புதிய ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது அனைவரும் கூறும்படி உண்மையிலேயே ஒரு கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். ஏனெனில் பயனர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தனியாக சூப்பர்கம்ப்யூட்டிங் க்கியூ1 (Supercomputing Chip Q1) கொண்டுள்ளது. இதனால் கேம் விளையாடுவதற்கு மற்ற ஸ்மார்ட்போன்களை விட இது வேகமாக இருக்கும்.
அதேபோல கேமிங் விளையாடும் போது ஏற்படும் ஹீட்டிங் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக 6K mm² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor Chamber Cooling System) உள்ளது. இந்த ஃபோர்-சோன் கூலிங் சிஸ்டம் (Four Zone) மூலம் நீங்கள் கேம் விளையாடும் பொழுது உங்கள் மொபைல் போனின் ஹீட் ஆனது அவ்வளவாக வெளிப்படாது.
இந்த புதிய ஃபிளாக்ஷிப் போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் மற்றும் நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.
ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனில் ஏற்கனவே அறிவித்தபடி, அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஆன்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது. மேலும், 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஐக்யூ உறுதியளித்துள்ளது.
மாற்ற மாடல்களை விட இதில் பெர்ஃபார்மென்ஸுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் கேமராவிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அதன்படி, இதில் எல்இடி ஃபிளாஷுடன் லெஜண்டரி டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 50 எம்பி ஆஸ்ட்ரோகிராபி கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 64 எம்பி 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
இந்த 64 எம்பி கேமராவில் 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் 6x மேக்ரோ போட்டோகிராபி அம்சம் உள்ளது. செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ், ப்ரோ, சூப்பர்மூன், அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட், டூயல்-வியூ வீடியோ போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்த 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
அதோடு இது 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கும் உள்ளது. மேலும், வைஃபை 7, என்எஃப்சி, புளூடூத் 5.4, ரிமோட் கண்ட்ரோலுக்கான ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன.
லெஜண்ட் மற்றும் ஆல்பா ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள உள்ள இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. இதில் 12 ஜிபி ரேம் கொண்ட பேசிக் வேரியண்ட் ரூ.52,999 விலையில் உள்ளது. 16 ஜிபி ரேம் கொண்ட டாப் எண்ட் வேரியன்டின் விலை ரூ.57,999 ஆகும்.
எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம். அதோடு, ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 6 மாதங்கள் வாரண்ட்டி வழங்கப்படும். 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது. இந்த ஐக்யூ 12 5ஜி டிசம்பர் 14 முதல் விற்பனைக்கு வர உள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…