கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளது. அதன்படி ஐபோன் 16 சீரிஸ் ஆனது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 அல்ட்ரா என நான்கு மாடல்களில் வரலாம்.
டிஸ்பிளே
ஐபோன் 16 மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கலாம். ஏனென்றால், தற்பொழுது சந்தைகளில் அறிமுகமாகிவரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. எனவே ஆப்பிள் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுக்கு பதிலாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவைப் பயன்படுத்தலாம்.
ஐபோன் 16 ப்ரோவில் 6.27 இன்ச் அளவுள்ள டிஸ்பிளேவும், ஐபோன் 16 அல்ட்ராவில் 6.86 இன்ச் டிஸ்பிளேவும் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 ஆனது 6.1 இன்ச் டிஸ்பிளேவுடனும், ஐபோன் 16 பிளஸ் ஆனது 6.7 இன்ச் டிஸ்பிளேவுடனும் வரலாம். இதில் ஐபோன் 15 சிரீஸில் இருக்கும் டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் முக்கிய அம்சமாக இருக்கும். ஐபோன் 16 அல்ட்ராவில் 2,400 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் இருக்கலாம்.
பிராசஸர்
ஆப்பிள் நிறுவனம் தனது ஒவ்வொரு தயாரிப்பை அறிமுகப்படுத்தும் போது அதில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து அறிமுகப்படுத்துகிறது. அந்தவகையில் இதன் செயலிலும் மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி, ஐபோன் 15 சீரியஸ் ஏ17 ப்ரோ சிப் பயன்படுத்தப்பட்டது.
இதனை ஒரு படி மேலே கொண்டு சென்று ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ரா மாடலில் ஏ18 ப்ரோ சிப் பொறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மற்ற ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் மாடல்கள் ஏ17 சிப் பொருத்தப்பட்டிருக்கலாம். ஏ18 ப்ரோ சிப்பில் வைஃபை 7 போன்ற புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம்.
கேமரா
ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ராவில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் உள்ளது போல, டெட்ரா ப்ரிசம் டெலிஃபோட்டோ அம்சம் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் 3x முதல் 5x வரை வரையிலான ஆப்டிகல் ஜூம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. 48 எம்பி கொண்ட அல்ட்ராவைடு கேமராவும் ஐபோன் 16 ப்ரோவில் இடம் பெறலாம். மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி
ஐபோன் 16 சீரிஸ் ஆனது 16 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்டிலிருந்து ஆரம்பம் ஆகலாம். அதோடு இந்த பேட்டரி சம்பந்தப்பட்ட எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் ஆகவே உள்ளன. இந்த 16 சீரீஸ் ஆனது அடுத்த ஆண்டு (2024) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…