IPhone 16 Series: பழைய சிப்களுக்கு குட்பை சொன்ன ஆப்பிள்.! புதிய ஏ18 ப்ரோ சிப்புடன் அதிரடி,!

IPhone 16 Series

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்தது. இதனையடுத்து ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியது.

தற்போது, ஐபோன் 16 சீரிஸில் பயன்படுத்தப்படக் கூடிய சிப்செட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 சீரிஸில் உள்ள ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோ மாடலில் ஏ16 பயோனிக் சிப் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடலில் ஏ17 ப்ரோ சிப் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த 2022ம் ஆண்டு ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸில் ஏ16 பயோனிக் சிப் பொருத்தப்பட்டது. ஆனால் அடுத்தவருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஐபோன் 16 சீரிஸில் உள்ள பேசிக் மாடல்களுக்கு பழைய ஏ16, ஏ17 சிப் பயன்படுத்தப்படாது என்று கூறப்படுகிறது.

IPhone 16 Series: அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஆப்பிள்.! விரைவில் களமிறங்குகிறதா ஐபோன் 16 சீரிஸ்.?

அதன்படி, ஐபோன் 16 சீரிஸ் ஆனது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 அல்ட்ரா என நான்கு மாடல்களில் வரலாம். இதில் இருக்கும் ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் மாடல் புதிய ஏ18 பயோனிக் சிப்பைக் கொண்டிருக்கும். அதேபோல, ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ரா (ப்ரோ மேக்ஸ்) மாடலில் ஏ18 ப்ரோ சிப் பொருத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏ18 ப்ரோ சிப்பில் வைஃபை 7 போன்ற புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம்.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனை ஹைடாங் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில் ஆய்வாளர் ஜெஃப் புவி என்பவர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஐபோன் 16 சீரிஸ் வெளியாக இன்னும் ஒரு வருடம் இருப்பதால் ஆப்பிள் நிறுவனம், எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கலாம். ஐபோன் 16 ஆனது 6.1 இன்ச் டிஸ்பிளேவுடனும், ஐபோன் 16 பிளஸ் ஆனது 6.7 இன்ச் டிஸ்பிளேவுடனும் வரலாம். ஐபோன் 16 ப்ரோவில் 6.27 இன்ச் அளவுள்ள டிஸ்பிளேவும், ஐபோன் 16 அல்ட்ராவில் 6.86 இன்ச் டிஸ்பிளேவும் பயன்படுத்தப்படலாம். இதில் டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் முக்கிய அம்சமாக இருக்கும்.

ஐபோன் 16 அல்ட்ராவில் 2,400 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் இருக்கலாம். ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ராவில், டெட்ரா ப்ரிசம் டெலிஃபோட்டோ அம்சம் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் 3x முதல் 5x வரை வரையிலான ஆப்டிகல் ஜூம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. 48 எம்பி கொண்ட அல்ட்ராவைடு கேமராவும் ஐபோன் 16 ப்ரோவில் இடம் பெறலாம்.

ஐபோன் 16 சீரிஸ் ஆனது 16 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்டிலிருந்து ஆரம்பம் ஆகலாம். பேட்டரி சம்பந்தப்பட்ட எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் ஆகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்