இந்தியாவில் கிரெடிட் கார்டு அறிமுகம்… வங்கிகளுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை… வெளியான தகவல்.!

AppleCard

இந்தியாவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.

பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும் இதற்காக இந்திய வங்கிகளுடன் ஆரம்பகட்ட  பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரெடிட் கார்டு என்பது, வங்கிகளிலிருந்து வழங்கும் ஒரு வகையான கடன் அட்டை.

இதன் மூலம் நாம் பயன்படுத்தும் நிதி சம்மந்தப்பட்ட தேவைகளுக்கு இந்த கிரெடிட் கார்டை உபயோகப்படுத்திவிட்டு, அதன் பிறகு குறிப்பிடப்பட்ட தேதிக்குள் வங்கிக்கு நாம் திருப்பி செலுத்த வேண்டும். ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் கடந்த ஏப்ரலில் தனது இந்திய பயணத்தின்போது எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் சந்தித்து இது குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதன் கிரெடிட் கார்டு, என்பிசிஐயின்(NPCI) ரூபே(RuPay) மூலம் இயக்கப்படுகிறதா அல்லது இது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்  (UPI) என்பது பின்னர் ஆப்பிள் நிறுவனம் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும். இந்தியாவில், கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்த வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மேலும் தற்போது பெரும்பாலும் மொபைல் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்து வரும் வேளையில் இந்தியா போன்ற நாடுகளில் ஆப்பிள், கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்புகின்றன.

ரிசர்வ் வங்கியுடன் ஆப்பிள் நிறுவனம் கிரெடிட் கார்டு குறித்து விவாதித்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் கார்டு கிரெடிட் கார்டை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்