5 நிமிடம் சார்ஜ்…38 மணிநேரம்…குறைந்த விலையில் தரமான ‘Redmi Buds 5’ அறிமுகம்.?

Redmi Buds 5

சியோமி நிறுவனம் கம்மியான விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இசை பிரியர்களே கவனத்திற்கு சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5)  இந்தியாவில் அதன் (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிப்ரவரி 20 முதல் Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனையாகு கிடைக்கும். 38 மணிநேர பேட்டரி ஆயுளுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.2,999க்கு விற்கப்பட இருக்கிறது.

நீங்கள் ஏதேனும் Redmi Note 13 தொடர் ஸ்மார்ட்போன், Xiaomi அல்லது Redmi Pad உடன் Redmi Buds 5 வாங்கினால், நீங்கள் அதனை வெறும் 2,499 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் பெற்று கொள்ளலாம். அதிநவீன அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் நிரம்பியிருக்கும் இந்த இயர்பட்கள் உங்கள் பாடல்களை கேட்கும் அனுபவத்தில் மிகச்சிறந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது, அதாவது (Fusion Purple) ஊதா, (Fusion Black) கருப்பு மற்றும் (Fusion White) வெள்ளை ஆகியவை அடங்கும். இந்நிலையில், பலருக்கும் மொபைல் போன் வாங்கிய பிறகு ஒரு சூப்பரான இயர்பட்ஸ் (Ear-buds) வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அப்படியென்றால், இதை வாங்கினால் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.

UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?

(Redmi Buds 5) சிறப்பம்சங்கள்

  • வெறும் 5 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 2 மணிநேரம் வரை விளையாட நேரமும், 10 நிமிடங்களுக்கு 4 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும்.
  • இரைச்சல் ரத்து செய்யும் தொழில்நுட்பத்துடன் இந்த இயர்பட்ஸ்கள் 46dB (Active Noise Cancellation) இரைச்சல்-தடுக்கும் திறன் மூலம், 99.5% வரை சத்தம் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
  • 6m/s காற்றின் சத்தத்தைத் தாங்கக்கூடிய வகையில் இரட்டை- மைக் AI அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது. இதனால், சவாரி செய்தாலும் ஓடினாலும் காற்றின் சத்தத்தை கட்டுப்படுத்தப்படுகிறது.
  • 1.6மீ டைனமிக் காயில் மற்றும் 12.4மிமீ டைனமிக் டைட்டானியம்-கோடட் டிரைவர்களுடன் வருவதால் தெளிவான ஆடியோவை அனுபவிக்க முடியும்.
  • மேலும், கூகுள் மற்றும் மற்ற சதானங்களில் எளிதாக கனெக்ட் செய்வதற்கு புளூடூத் 5.3 இணைப்பை கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்