உலகின் முதல் AI மென்பொருள் என்ஜினீயர் “Devin” அறிமுகம்… சிறப்பசங்கள் என்ன?

devin

Devin : டெவின் என்ற உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் என்ஜினீயரை பிரபல நிறுவனமான காக்னிஷன் (Cognition) அறிமுகம் செய்தது. இதுவரை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புது புது அம்சங்களுடன் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், உலககின் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏஐ மென்பொருள் இன்ஜினியர் அறிமுகமானார்.

Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!

வித்தியாசமான படைப்பு:

ஏஐ மென்பொருள் இன்ஜினியருக்கு ‘டெவின்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை ஏஐ பாட்கள், டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ, வீடியோ போன்றவை ஜெனரேட் செய்து வந்த நிலையில், தற்போது ஒரு வித்தியாசமான புதிய பணியை மேற்கொள்ளும் வகையில் காக்னிஷன் நிறுவனம் டெவின் ஏஐ மென்பொருள் இன்ஜினியரரை உருவாக்கியுள்ளது.

Read More – கார் விரும்பிகளே எச்சரிக்கை… வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு.. இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?

பொறியியல் பணி:

டெவின் ஏஐ மென்பொருள் இன்ஜினியர் ஒரு அயராத, திறமையான டீம்மேட், உங்களுடன் இணைந்து கட்டமைக்க அல்லது நீங்கள் மறுபரிசீலனை செய்யும் பணிகளை சுயமாக செய்து முடிக்கும். அதன்படி, டெவின் மூலம், பல்வேறு சிக்கலான பொறியியல் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.

சிறப்புக்கள்:

ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்து வேலையை டெவின் செய்யும். கோடிங் எழுத இதனை பயன்படுத்தலாம் என்றும் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ப்ராம்ப்ட் (Prompt) செய்தால், அதன் ரிசல்ட்டை சில நிமிடங்களில் பயனாளர்களுக்கு டெவின் வழங்கும். அறிமுகமில்லாத தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ள உதவுகிறது. மேலும், கோட்பேஸ்களில் உள்ள பிழைகளைத் தானாகக் கண்டுபிடித்து சரிசெய்யும்.

Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.!

எனவே, டெவின் என்ஜினீயர் மனித இன்ஜினியர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அப்டேட் வழங்குவது, டிசைன் சாய்ஸ்களில் இணைந்து பணியாற்றுவது, ஆப்ஸ்கள் வடிவபைப்பு, கோடிங்கில் உள்ள Bug-ஐ கண்டுபிடித்து, அதனை சரி செய்வது, புதிய புரோக்ராமிங் கோடிங் செய்வது என பல்வேறு என்ஜினீயர் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்