இந்தியாவிலும் அறிமுகம்! இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக்… மாதம் ரூ.699.!
இந்தியாவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக் வசதி பெற மாதத்திற்கு ரூ.699 திட்டம் அறிமுகம்.
மெட்டா நிறுவனம் அதன் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் (Meta Verified) சேவையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கிற்கான ப்ளூடிக்கை பெற உதவும் கட்டண சலுகையை மெட்டா நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் களில் இந்த ப்ளூ டிக் பெற மாதத்திற்கு ரூ.699 ஆகவும், இணையத்தில் ரூ.599 ஆகவும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டர் தனது ‘ப்ளூ’ டிக் சந்தா சேவையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட ப்ளூ டிக் பெற மெட்டாவின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். பயனர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் சுயவிவரம் அடங்கிய பெயருடன் பொருந்தக்கூடிய அரசாங்க ஐடியையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் சில பயனர்கள் செல்ஃபி வீடியோவை வழங்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.