சர்வதேச ஸ்பேம் அழைப்புகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
கடந்த சில நாட்களாகவே, வாட்ஸ்அப் பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
உலகளவில் பெரும்பாலான பயனர்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வதோடு, மக்கள் எந்த நாட்டிலிருந்தும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் அழைப்புகளைச் செய்துகொள்ள முடியும். இந்த வசதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் எளிதான வழியாக மாறியுள்ளது.
எனவே, இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம். இதனால் மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய தகவலை பெற முயற்சி செய்கிறார்கள். ஆகவே, இதுபோல ஏதெனும் சைபர் தாக்குதலை எதிர்கொண்டால், அதனை cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று மத்திய உள்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதனையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பயனர்களுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகள் தொடர்பான பிரச்சனை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் நிறுவனத்திடம் எங்களது கேள்விகளை கேட்டுளோம் என்றும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பாகும். ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த எண்கள் எவ்வாறு வெளியேறுகின்றன என்பது இன்னமும் தெரியவில்லை, என்று சந்திரசேகர் கூறியுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…