விண்டோஸ்10 பற்றிய சுவாரசியமான தகவல்கள்…!!

Default Image

 

விண்டோஸ் 7 க்கு பிறகு வெளிவந்த வெர்சன்களிலேயே விண்டோஸ்10 தான் மிகவும் பிரபலமாக உள்ளது. ஸ்டார்கவுண்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் கணிப்பு படி, விண்டோஸ்10 கணிணி உலகில் 42.78% உள்ள நிலையில் விண்டோஸ்7 வெறும் 41.86% தான் உள்ளது. விண்டோஸ்10 தான் கணிணி உலகின் தற்போதைய சூழ்நிலையில் நம்பர் 1 ஆகா திகழ்கிறது.

600 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ்10 இயங்கிவருவதாக கடந்த நவம்பர் மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. கணிணிகள், டேப்லெட், Xbox, ஹோலோலென்ஸ் ஹெட்செட் மற்றும் சர்பேஸ் ஹப் போன்ற சாதனங்களில் இயங்குகிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ல் பல டச்பேட் சைகைகள் உள்ளன. இங்கு நீங்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய 6 டச்பேட் சைகைகளை தொகுத்துள்ளோம். மிகவும் துல்லியமான டச்பேடில் மட்டுமே இவை செயல்படும்.

ஸ்க்ரோல்

இரண்டு விரல்களையும் டச்பேடில் வைத்து, செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ நகர்த்தி ஸ்க்ரோல் செய்யலாம்.

ஜூம் இன் ஜூம் அவுட்(Zoom in & Zoom out)

இரண்டு விரல்களையும் டச்பேடில் வைத்து,உள்நோக்கியோ அல்லது வெளிநோக்கியோ இழுத்து ஜூம் இன் அவுட் செய்யலாம்.

கமெண்டுகளை பார்க்க இதற்கு இரண்டு விரல்களை வைத்து டச்பேடில் தட்டலாம் அல்லது டச்பேடின் வலது பக்க கீழ் மூலையை அழுத்தலாம்.

திறந்துள்ள அனைத்து விண்டோஸையும் பார்க்க டச்பேடில் மூன்று விரல்களை வைத்து உங்களுக்கு எதிர் திசையில் தடவுவதன் (Swipe) மூலம் திறந்துள்ள அனைத்து விண்டோஸையும் பார்க்கலாம்.

கார்டனோ-வை இயக்க மைக்ரோசாப்ட் வெர்சுவல் அஸிஸ்டென்ட் கார்டனோ-வை இயக்க, உங்கள் மூன்று விரல்களை வைத்து டச்பேடில் தட்ட வேண்டும்.

வெர்சுவல் கணிணிகளுக்கு இடையே மாற உங்கள் நான்கு விரல்களை டச்பேடில் வைத்து வலது அல்லது இடதுபுறமாக தடவ வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்