இன்ஸ்டாகிராம் மக்களை சோகமடைய செய்கிறது..! எலன் மஸ்க்
இன்ஸ்டாகிராம் பயணர்களை மனசோர்வடைய செய்கிறது என்றும் ட்விட்டரானது பயனர்களைக் கோபமடையடைய செய்கிறது என்றும் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டிற்கு மஸ்க்கை பின் தொடருபவர்களில் பலர் பதிலளித்திருந்தனர். அவர் செய்த ட்வீட்டில், “இன்ஸ்டாகிராம் மக்களை மனச்சோர்வடையச் செய்கிறது மற்றும் ட்விட்டர் மக்களை கோபப்படுத்துகிறது. எது சிறந்தது?” என்று கேட்டிருந்தார்.
அதாவது மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் பயனர்களை சோகமடையச் செய்வதாகவும் தனது ட்விட்டர் தளம் பயனர்களை கோபப்படுத்துகிறது என்றும் இதில் எது சிறந்தது என பதிவிட்டிருக்கிறார். அவரின் கேள்விக்கு அவர் எதிர்பார்த்த பதிளுக்கு எதிர்மாறான பதிள்களே வந்தது.
பயனர் ஒருவர் அவரது கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன் தான் பயனர்களை சோகமடைய செய்கிறது. இன்ஸ்டாகிராம் இல்லை என்று பதிலளித்தார். மற்றொருவர் ட்விட்டர் தன்னை கோவப்படுத்த வில்லை என்னை சிரிக்கவைக்கிறது என்று பதிலளித்தார்.