ஏஐ ஸ்டிக்கர் டூல் முதல் ஃபில்டர்ஸ் வரை.! புதிய அம்சங்களை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!

AIStickerTool

மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்களைக் கொண்டு வருவது போல, இன்ஸ்டாகிராமும் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியில் அடிக்கடி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் இப்போது கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் உட்பட பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது.

ரீல்களை உருவாக்க புதிய வழிகள்

இதுவரை ஏதேனும் ஒரு ரீல் நீங்கள் போஸ்ட் செய்யவேண்டும் என்றால், அந்த வீடியோ அல்லது புகைப்படத்தில் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய பாடல்களை மட்டுமே வைக்கமுடியும். ஆனால் இந்த அம்சம் மூலம் நீங்கள் போஸ்ட் செய்யும் ரீலில், உங்கள் குரலை (Voiceover) இணைக்கமுடியும். இதைத்தவிர தனிப்பட்ட கிளிப்புகளை கிராப், ரொட்டேட் மற்றும் எடிட்டிங்கின்போது ரீடூ, அன்டூ செய்துகொள்ள முடியும்.

ரூ.18,000 பட்ஜெட்டில்..12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ்.! அறிமுகமானது விவோவின் புதிய ஒய்100ஐ 5ஜி,!

இதனால் உங்களுக்கென சொந்தமான ரீலை உருவாக்க முடியும். அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கிடைக்கும் 10 புதிய டெக்ஸ்ட் டு ஸ்பீச் குரல்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கும் ஆறு புதிய எழுத்துருக்கள் உள்ளன. இதை வைத்து உங்கள் ரீலை இன்னும் மேம்படுத்தலாம்.

ஏஐ ஸ்டிக்கர் டூல் & ஃபில்ட்டர்ஸ்

மேலும், மற்ற கிரியேட்டர்களை விட தனித்துவமான ரீல்கள் மற்றும் ஸ்டோரிகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உங்களுக்கு பயன்படும் வகையில், உங்கள் போனில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து அல்லது இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்க்கும் படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கி வைத்துக்கொள்ள முடியும்.

இனி வாட்ஸ்அப்பில் அன்லிமிடெட் கிடையாது.. செக் வைத்த கூகுள்..!

அதோடு இன்ஸ்டாகிராம் பயனர்களை கவரும் வகையில் புதிய பில்டர்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய பில்டர்ஸ்களில் ஜூம் ப்ளர், கலர் ப்ளீட் ஆகியவை அடங்கும். இதில் உங்களுக்குத் தேவையான பில்டரை நீங்கள் தேர்வு செய்யும்போது, அதில் கலர் போன்றவற்றை எடிட் செய்து கொள்ளலாம். இந்த அம்சங்கள் இப்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்