இன்ஸ்டா, பேஸ்புக்கை தொடர்ந்து LinkedIn-ல் ஷார்ட் வீடியோஸ்!

LinkedIn

LinkedIn: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று லிங்க்ட்இன்-ல் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த திட்டம்.

வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற LinkedIn சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களை ஈர்ப்பதற்கும் காலத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்களை கொண்டுவர LinkedIn திட்டமிட்டு வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது, வேலைவாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த LinkedIn சமூக வலைத்தளம் கேமிங் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது. அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், Puzzle உள்ளிட்ட பல்வேறு கேம்கள் மூலம் பயனர்களை ஈர்ப்பதற்காக லிங்க்ட்இன் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பிரபல சமூக வலைத்தளங்களாக இருக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்று லிங்க்ட்இன்னில் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் ஷார்ட் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் தான் அதிகம் ட்ரெண்டிங்கில் உள்ளது.இதற்காகவே ஒரு கூட்டமே இருக்கிறது.

இதனால் பயனர்களை ஊக்குவிப்பதற்கும், ஈர்ப்பதற்கும் ஷார்ட் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை LinkedIn சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, ஷார்ட் வீடியோ திட்டத்தை லிங்க்ட்இன் பிளாட்ஃபார்மில் அறிமுகப்படுத்த மும்மரம் காட்டி வரும் நிலையில், அதற்கான சோதனையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பயனர்கள் தொடர்புடைய வீடியோக்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இந்த அம்சம் சோதிக்கப்படுகிறது. இந்த சோதனையானது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், பெரும்பாலான பயனர்கள் இதைப் பயன்படுத்த முடியாது எனவும் கூறப்படுகிறது. எனவே, அடுத்தடுத்து புதிய அம்சங்கள் மூலம் LinkedIn சமூக வலைத்தளம் புதிய பரிமாணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war