ரூ.6,299 போதும்..6ஜிபி ரேம்..5,000mAh பேட்டரி.! இன்பினிக்ஸ்-ன் புதிய மாடல் என்ன தெரியுமா.?

Infinix Smart 8 HD

இன்பினிக்ஸ் நிறுவனம் 6.6 இன்ச் டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி மற்றும் டைனமிக் நாட்ச் அம்சத்துடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிரிஸ்டல் கிரீன், ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,000க்கும் குறைவான பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆகி உள்ளதால், பல வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் சிறந்த தேர்வாக இருக்கலாம். இப்பொழுது இந்த ஸ்மார்ட் போனின் விவரக் குறிப்புகள் மற்றும் விலையை காணலாம்.

டிஸ்பிளே

இதில் 1612 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் (16.76 செ.மீ) அளவிலான ஐபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிக் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதனால் போனில் சாதாரண பயன்பாடுகள் மட்டுமல்லாமல் கேம் விளையாடுவோம் சிறப்பான அனுபவத்தை தர முடியும்.

சத்தமில்லாமல் சம்பவம் செய்த ரெட்மி.! புதிய மாடலை அறிமுகம் செய்து அதிரடி.!

அதோடு ஐபோன்களில் இருக்கக்கூடிய டைனமிக் ஐலேன்ட் போலவே இருக்கக்கூடிய புதுமையான மேஜிக் ரிங் அம்சம் உள்ளது. இது ஃபேஸ் அன்லாக், பேக்கிரௌண்ட் கால்,  சார்ஜிங் அனிமேஷன் ஆகியவற்றுடன் இணையற்ற வசதியை வழங்கும் ஒரு கேம்-சேஞ்சர் ஆகும். பாதுகாப்பிற்க்காக சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

பிராஸசர்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனில் யூனிசோக்கின் டி606 (UNISOC T606) என்கிற ஆக்டா கோர் பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. 1.6 GHz வரையிலான கிளாக் ஸ்பீட் கொண்டுள்ள இந்த பிராசஸர், ஸ்மூத் பிரௌசிங், ஸ்ட்ரீமிங் போன்றவற்றிக்கு சிறந்ததாக இருக்கும். ஆண்ட்ராய்டு 13 கோ அடிப்படையிலான எக்ஸ் ஓஎஸ் 13 (XOS 13) உள்ளது. மேலும் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், இ-காம்பஸ், ஜி-சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

கேமராவைப் பொறுத்தவரை குவாட் எல்இடி ரிங் ஃப்ளாஷுடன் கூடிய 13 எம்பி ஏஐ டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ அம்சத்துடன் கூடிய கேமரா உள்ளது. முன்புறத்தில் பஞ்ச்-ஹோல் கட்டவுட்டுடன் 5 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் 720 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். ஷார்ட் வீடியோ, வீடியோ, AI கேம், பியூட்டி, சூப்பர் நைட், போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன், டைம்லேப்ஸ், AR ஷாட், FHD வீடியோ ரெக்கார்டிங், ஃபில்டர்கள் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

வெறும் ரூ.15,000 பட்ஜெட்.. கடந்த வாரம் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

பேட்டரி

184 கிராம் எடை கொண்ட ஸ்மார்ட் 8 எச்டி போனில் 5000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், புளூடூத் 5.0, வைஃபை, யுஎஸ்பி-சி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பிற அம்சங்களும் உள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

கிரிஸ்டல் கிரீன், ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் அறிமுகமாகியுள்ள இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன், 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டில் மட்டுமே உள்ளது. 3 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் உள்ளது. இது டிசம்பர் 13ம் தேதி பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.6,299 ஆகும். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்குரூ.630 வரை 10% தள்ளுபடி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்