இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக புதிய பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், அதன் புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது.
இதன் அறிமுகத் தேதியானது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டியின் வாரிசு ஆகும்.
இதில் பஞ்ச்-ஹோல் உடன் கூடிய 6.6 இன்ச் (16.7 செ.மீ) அளவுள்ள எச்டி+ எல்சிடி டிஸ்பிளே இருக்கலாம். இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கலாம். இது ஸ்லிம் ஆக இருப்பதால் கையில் எளிதில் பிடிக்க முடியும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி போனிலும் 6.6 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதில் சைடு மோவுண்டட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனில் பொருத்தப்பட்டுள்ள பிராசஸர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஸ்மார்ட் 7 எச்டியில் யூனிசோக் ஸ்ப்ரெட்ட்ரம் SC9863A1 சிப்செட் உள்ளது. இதே சிப்செட் ஸ்மார்ட் 8 எச்டி போனிலும் பொருத்தப்படலாம். அதோடு ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 12 மூலம் இயங்கலாம்.
இந்த போனின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கையில், எல்இடி பிளாஷ் கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள சென்சார்கள் குறித்து வெளியாகவில்லை. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டியில் 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி ஏஐ கேமரா உள்ளது. செல்ஃபிக்காக 5 எம்பி கேமரா உள்ளது.
இதில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரிப் பொறுத்தப்படலாம். இதை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதே போன்ற திறன் கொண்ட பேட்டரி இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டியில் உள்ளது.
ஸ்மார்ட் 8 எச்டி 128 ஜிபி யுஎப்எஸ் 2.2 ஸ்டோரேஜூடன் வரலாம். 4 முதல் 6 ஜிபி ரேம் இருக்கலாம். கிரிஸ்டல் கிரீன், கேலக்ஸி ஒயிட், ஷைனி கோல்ட் மற்றும் டிம்பர் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியாகலாம்.
இந்த போனைப் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. ஆனால் ஸ்மார்ட் 7 எச்டி பேசிக் மாடல் ரூ.5,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதே போல குறைவான விலையை இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனிலும் எதிர்பார்க்கலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…