இன்பினிக்ஸ்-ன் புதிய பட்ஜெட் லேப்டாப்.? விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

INBOOK Y2 PLUS

இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் லேப்டாப்களையும் பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இன்புக் ஒய்1 பிளஸ் (InBook Y1 Plus) என்கிற லேப்டாப்பை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப் ரூ.24,990 என்கிற விலையில் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு உள்ளது.

இதே இன்புக் ஒய் சீரிஸில் இன்புக் ஒய்2 பிளஸ் (InBook Y2 Plus) என்கிற அடுத்த மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது. நிறுவனம், குறிப்பிட்டுள்ளபடி, இன்புக் ஒய்2 பிளஸ் ஆனது 30,000 ரூபாய்க்குள் ஒரு மலிவு விலை லேப்டாப் ஆக இருக்கும்.

வெறும் ரூ.30,499க்கு ஒன்பிளஸ் பேட்..! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-இன் அதிரடி ஆஃபர்கள்.!

இது மலிவு விலை லேப்டாப் மட்டுமல்ல, மெட்டல் பாடியுடன் கூடிய ஸ்லிம் மற்றும் வெயிட்லெஸ் லேப்டாப்பும் ஆகும். இது உறுதியான கட்டமைப்புடன் வருகிறது. டிஸ்பிளேவைப் பொறுத்தவரையில் அல்ட்ரா-நாரோ பெசல்கள் உள்ளன. இது வழக்கத்திற்கு மாறாக உங்களது ஸ்க்ரீனை இன்னும் பெரிதாகவும் தெளிவாகவும் காட்டும்.

பங்களாதேஷில் இன்புக் ஒய்2 பிளஸ் லேப்டாப் வெளியாகி இருந்தாலும், இந்தியாவில் அதிலிருந்து சற்று வித்தியாசமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தலாம். பங்களாதேஷில் அறிமுகமான இன்புக் ஒய்2 பிளஸில் 1920×1080 ரெசல்யூஷன் கொண்ட 15.6இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் வீடியோ கால் செய்ய டூயல் ஸ்டார் லைட்டுடன் கூடிய எப்எச்டி கேமரா உள்ளது.

120Hz டிஸ்ப்ளே..8GB ரேம் உடன் புதிய 5G போன்கள்.! ரியல்மீயின் அடுத்த அதிரடி.!

இதில் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் எஸ்எஸ்டி உடன் இணைந்து 11th-gen Intel Core i5 பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 12 ஹோம் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. கிபோர்டில் பேக்லைட் வசதி மற்றும் மல்டி-டச் டச்பேடுடன் வருகிறது. இரண்டு 2 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது.

இந்தியாவில் இந்த லேப்டாப்பின் வெளியீட்டு தேதி தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், மடிக்கணினி சில்வர், கிரே மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ண வகைகளில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷில், 8 ஜிபி ரேம் வேரியண்ட் 56,990 BDT (தோராயமாக ரூபாய் 43,000) ஆகும். இந்தியாவில் ரூ.30,000 க்குள் இருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu
TNBudget2025 - budget
Free laptop for College students
tidel park TN
Tamil Nadu Budget 2025
TN Budget 2025 for students
TNBudget2025