இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார் தொழில்நுட்பம்! Vivo V50 போனின் சிறப்பு அம்சம்!

விவோ வி50 பிப்ரவரி 18, 2025 அன்று ரூ.37,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vivo V50 is coming

டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல் வெளியிடப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், சரியான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கசிந்த கசிந்த தகவலின் படி, (Vivo V50) விவோ வி50 பிப்ரவரி 18, 2025 அன்று வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த போன் என்ன விலையில் அறிமுகம் ஆகும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

சிறப்புஅம்சங்கள் 

டிஸ்பிளே : வசதியை பொறுத்தவரையில் : 120Hz ரேப்ரேஸ் ரெட் வீதத்துடன் 6.7-இன்ச் குவாட்-வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

Processor : ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயங்குகிறது. எனவே, கேமிங் அதிகமாக விளையாடுபவர்களுக்கு இந்த போன் சிறந்த ஒரு தேர்வாக இருக்கும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ்.

கேமராக்கள்: இரண்டு 50-மெகாபிக்சல் சென்சார்களுடன் இரட்டை பின்புற அமைப்பு மற்றும் 50-மெகாபிக்சல் முன்  கேமரா கொண்டுள்ளது. எனவே, புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த போன்  சிறப்பான ஒரு தேர்வாகவும் இருக்கும்.

பேட்டரி: இந்த போனானது 90W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,000 எம்ஏஹெச் வசதியை கொண்டுள்ளது.

போனின் வடிவமைப்பு: மையமாக நிலைநிறுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் கேமராவுடன் வளைந்த-முனை காட்சி; ரோஸ் ரெட், டைட்டானியம் கிரே மற்றும் ஸ்டாரி ப்ளூ வண்ண விருப்பங்களில் வரவிருக்கிறது.

இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார்

3D-Star Technology என்பது Vivo V50 இன் Starry Night வேரியண்டில் வழங்கப்படும் புதிய தொழில்நுட்பம். இது போனின் பின்புறப் பகுதியில் ஒரு உயிரோடு இருக்கின்ற காட்சியளிக்க கூடிய வகையில் மாற்றுகிறது, வானிலைக்கு ஏற்றபடி மாறவும் செய்கிறது.

அதாவது, நேரடியாக சூரிய ஒளி அல்லது பட்டது என்றால் பின்புறம் விண்மீன் மையமான இரவு வானைப் போல மின்னுகிறது. இது போனை உபயோகம் செய்யும்போது நமக்கு நல்ல உணர்வை கொடுக்கும். ஏனென்றால், உபயோகம் செய்யும்போது விண்வெளி உணர்வை நமக்கு கொடுக்கும். இந்த 3D-Star Technology இந்தியாவின் முதல் முறையாக Vivo V50 இல் தோன்றுகிறது என்பதால் போனின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது.

விலை எவ்வளவு? 

இப்படியான சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும் Vivo V50 அடிப்படை விலை சுமார் ரூ.37,999 என்ற விலையில் அறிமுகம் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது அதன் முன்னோடியான Vivo V40 ஐ விட சற்று அதிகமான விலை தான். ஏனென்றால்,  Vivo V40 ரூ.34,999 என்ற விலையில் அறிமுகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்