2027-க்குள் உலகின் 50% ஐபோன்களை இந்தியா உற்பத்தி செய்யும் புதிய ஆய்வு
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக புதிய ஆய்வறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கிறது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் புதிய அறிக்கையின் படி , இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 2027 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக உயரும், தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் எனவும்,
கடந்த ஆண்டு உலகளவில் 85 சதவீத ஐபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டன ஆனால் , அமெரிக்கா-சீனா துண்டிப்பு நடவடிக்கைகளால் ஆப்பிள் சாதனங்களுக்கான உற்பத்தி மையமாக அதன் மேலாதிக்க பங்கை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
சீனாவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ள நிச்சயமற்ற நிலைகள்,சீனாவிற்கு வெளியே அதன் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவும் மற்றும் வியட்நாமும் நாடுகள் இருக்கும் என தைவானின் டிஜி டைம்ஸ் செய்தித்தாளின் ஆய்வுப் பிரிவின் ஆய்வாளரான லூக் லின் தெரிவித்துள்ளார்.