உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகளில் பாதிப்பு ..! பயனர்கள் அவதி ..!
மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் உள்ள பல கணினி சார்ந்த வேளைகளில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ் பிரதான இயங்குதளமாக செயல்பட்டு வருகிறது. விண்டோஸ் எக்ஸ்பி-யில் தொடங்கி தற்போது விண்டோஸ் 11 வது வெர்சன் வரை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பல புதிய அப்டேட்களுடன் அட்டகாசமாக இயங்கும் விண்டோஸ் 11 இயங்குதளமானது (Operating System) பலதரப்பு பயனர்களிடம் தொழில்நுட்ப ரீதியாக அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென விண்டோஸ் (Windows OS 11 Crashed) ஓஎஸ் 11 பயன்படுத்துவோரின் பாதிக்கப்பட்டுள்ளன.
அதாவது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 பயன்படுத்துவோரின் கணினி திரையில், ‘நீல நிற திரையில் உங்கள் கணினி ஒரு சிக்கலில் உள்ளது மற்றும் அதனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் இதனால் நாங்கள் தவறுகளை சேகரிக்கிறோம், அதன் பிறகு நீங்கள் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள்.’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது.
இதனை பாதிக்கப்பட்ட பயனர்கள், அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் விண்டோஸ் 11 ஓஎஸ் செயலிழந்ததை தெரிவித்து வருகின்றனர். இந்த செயலிழப்புக்கான காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. மேலும், மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப குழு இந்த பிரச்சனையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.