வாட்ஸ் அப்பில் இமேஜ் எடிட்டிங்…. புதிய AI அம்சத்தை கொண்டு வர திட்டம்!
WhatsApp : வாட்ஸ் அப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பில்லியன் பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், தற்போது வாட்ஸ் ஆப்பில் AI அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதாவது, AI வசதியுடன் இயங்கும் புகைப்பட எடிட்டிங் அம்சத்தை வாட்ஸ் அப்பில் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சங்கள் புகைப்பட எடிட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்துவதையும், பயனர்கள் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதன்படி, Al மூலம் WhatsApp பயனர்களை நிகழ்நேரத்தில் புகை படங்களைத் எடிட்டிங் செய்ய அனுமதிக்கும். மேலும் இந்த இமேஜ் எடிட்டிங் கருவி பயனர்களுக்கு பலவிதமான எடிட்டிங் விருப்பங்களை வழங்கும். பேக்ரவுண்டை சரிசெய்யும் திறன், புகைப் படங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும்.
இந்த அம்சம் புகைப்பட எடிட்டிங் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புகைப்பட எடிட்டிங் கருவிக்கு கூடுதலாக, WhatsApp அதன் Meta AI சேவையுடன் ஒருங்கிணைப்பையும் ஆராய்ந்து வருகிறது. அதில் Al chatbotக்கு நேரடியாக பல்வேறு கேள்விகளை கேட்கவும் வழிவகை செய்யும் என்றும் இந்த இமேஜ் எடிட்டிங் அம்சம் பீட்டா வெர்சனில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த புதிய அம்ச வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாட்ஸ்அப் பயனர்கள்.