ப்ளூ டிக் வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..! ட்விட்டர் நிறுவனம் அதிரடி முடிவு..!
ட்விட்டர் நிறுவனம் பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க முடிவு செய்துள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனால் ப்ளூ டிக்கிற்கு பணம் செலுத்தாத பத்திரிகையாளர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் விரைவில் அதை இழக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டமான ட்விட்டர் ப்ளூ சேவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட ப்ளூ டிக்குகளை வரும் ஏப்ரல் 1 முதல் நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி உறுதிப்படுத்தபட்ட (Verified) ப்ளூ டிக் வேண்டுமென்றால் இணையப் பயனர்கள் மாதம் $8 கட்டணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ சேவையை பெற வேண்டும், அதே சமயம் iOS மற்றும் Android செயலிகளில் ஆப் ஸ்டோர் செலவுகள் காரணமாக மாதத்திற்கு $11 செலுத்தி ட்விட்டர் ப்ளூ சேவையை பெற வேண்டும் என்பதை நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது.